செய்திகள் :

சென்னை 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக உருவாகும் பனகல் பூங்கா!

post image

சென்னையின் 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் தயாராகி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்கு உண்டான கட்டுமான பணிகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-ஆவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை - சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பனகல் பூங்கா மெட்ரோ நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்:

முதல்கட்டமாக பவர் ஹவுஸிலிருந்து பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையே அமையவுள்ள பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தி.நகர் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதி என்பதாலும் வர்த்தகம் அதிகம் நடைபெறும் பகுதியாக காணப்படுவதாலும் பனகல் பூங்கா நிலையத்துக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தில் 6 நுழைவு மற்றும் 6 வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1000 பேர் ஒரே நேரத்தில் இருந்து பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் மிகப்பெரிய மெட்ரோ நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்தப்படியாக பனகல் பூங்கா நிலையம் தயாராகி வருகிறது.

இத்திட்டப் பணிகள் வரும் 2027-க்குள் நிறைவடையும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

வேங்கைவயல் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!

வேங்கைவயல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ... மேலும் பார்க்க

34 ஆண்டுகளுக்கு முன் தப்பிய குற்றவாளி! இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விருப்பம்!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி 34 ஆண்டுகள் கழித்து தனது இறுதிக் காலத்தை சிறையில் கழிக்க விரும்பி சரணடைந்துள்ளார்.கேரளத்தின் நேமோம் பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண... மேலும் பார்க்க

ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவுக்கு அழைப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தல... மேலும் பார்க்க

பாடல் கேட்டுக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுமி ரயில் மோதி பலி!

மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் காதில் ஹெட்போன் அணிந்தப்படி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமி, ரயில் மோதியதில் பலியானார்.பால்காரின் மக்னே கிராமத்தைச் சேர்ந்த வைஷ்னவி ராவல் (வயது 16) எனும் சிற... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான எதிர்ப்பை திமுக அரசு பதிவு செய்யவில்லை: எல்.முருகன்

புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் திமுக 'நாடகம்' நடத்துகிறது... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவதற்கான வரையறைகளை இந்திய தேர்தல் வெளியிட்டுள்ளது.இது பற்றி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி... மேலும் பார்க்க