இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
Iraq: ``பெண்களின் திருமண வயது 9'' -குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஈராக்...
குழந்தை திருமணத்தை ஆதரித்து ஈராக்கில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்பது வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்தை ஈராக் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில், 'இச்சட்டம் குழந்தை கற்பழிப்பை சட்டப்பூர்வமாக்கும்' என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் குழந்தை திருமணம் நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகிறது. அந்நாட்டில் 1950-ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டு, திருமண வயது வரம்பு 18 என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், 28℅ பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொள்வதாக, 2023-ல் ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவித்தது. சில குடும்பங்கள், தங்கள் வீட்டுப்பெண் குழந்தைகளை வறுமையிலிருந்து தப்புவிக்கும் வழியாக திருமணத்தைப் பார்க்கிறார்கள். ஆனால், குழந்தை திருமணத்தால் இளம் பெண்கள் கல்வி வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ஈராக் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 9-ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தம் செய்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டவிதிகளின்படி, ஷியா பிரிவு முஸ்லீம் குடும்பங்களில் இருக்கிற பெண்களுக்கு திருமண வயது வரம்பு 9 வயது என்றும், சுன்னி பிரிவு முஸ்லீம் குடும்பங்களில் இருக்கிற பெண்களுக்கு திருமண வயது வரம்பு 15 வயது என்றும், மதத்தின் பிரிவைச் சார்ந்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
1950 முதல் நடைமுறையில் இருந்த 'பெண்ணின் திருமண வயது வரம்பு 18' என்ற சட்டத்தையும் நீக்கியுள்ளது. இதனை எதிர்த்து, 'இளம்பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை வரும்; திருமணம் என்ற பெயரில் இளம்பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும்' என்று மனித உரிமை ஆர்வலர்களும், பெண்ணுரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
பாராளுமன்ற சட்டக்குழுவின் உறுப்பினர்களில் ஆரம்பித்து வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்தச் சட்டத்தைக் கண்டித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...