செய்திகள் :

ஈரோடு கிழக்கு: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

ஈரோடு (கிழக்கு) இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடவதற்கான வரையறைகளை இந்திய தேர்தல் வெளியிட்டுள்ளது.

இது பற்றி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

மேற்காணும் இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:-

அ) 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இது சம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

(2) உட்பிரிவு (1)-றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:-

(a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம்முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

(b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாள்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.

(3) இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

இதையும் படிக்க: ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

ஆ) 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)(b)ஆம் உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 05.02.2025 (புதன்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இ) 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126(1)(b) ஆம் பிரிவின்கீழ், மேற்காணும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்... மேலும் பார்க்க

வளர்ப்புப் பூனையால் வேலையை இழந்த பெண்!

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்துள்ளார்.சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதம் துவக்கத்தில் அவர் பணிப்புரியும் நி... மேலும் பார்க்க

7 ஆம் வகுப்பு மாணவன் பலி!ஆசிரியர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற ... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் க... மேலும் பார்க்க

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற... மேலும் பார்க்க