இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!
கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி இன்று (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு பேரும், நியூசிலாந்து அணியிலிருந்து இருவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விவரம்
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, மாட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.