செய்திகள் :

``நாம ஆரோக்கியமாக இருக்கும் போதே செய்திடனும்; ஏன்னா..!” - பிறந்த நாளில் உடல் தானம் செய்த டி.இமான்

post image

இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் தானம் செய்திருந்தாலும், அதை இன்று அறிவித்துவிட்டார்.

உடல் தானம்

இசையமைப்பாளர் இமான், இப்போது சமூக சேவகராகவும் நற்பணிகள் பலவற்றை செய்து வருகிறார். இப்போது விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஷோவின் நடுவராகவும் இருந்து வரும் அவர், பிரபுசாலமன், சுசீந்திரன் உள்பட பலரின் படங்களுக்கு இசைமைத்தும் வருகிறார். சமீபத்தில் அவரது இசையில் வெளியான 'பேபி & பேபி' பட பாடல்களும் வரவேற்பை அள்ளி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புகளை தானம் செய்திருக்கிறார்.

இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து விட்டு, அவர் உடல் உறுப்பு தானம் செய்ததை குறித்து கேட்டால், உற்சாகமாக பேசுகிறார்..!

உடல் தானம் செய்த போது

''நாம இறந்த பிறகும் இந்த உடல் பயனுள்ளதாக இருக்கும். பலரின் வாழ்விலும் ஒளி வீச வைக்கணும்னு விரும்பினேன். இப்படி ஒரு எண்ணம் ரொம்ப நாளாகவே மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. அதுக்கான சரியான சமயம், இப்போது தான் அமைந்தது. ரெண்டு நாளைக்கு முன்னாடி, உடல் தானம் செய்திருந்தாலும், பிறந்த நாளன்று தான் அறிவிக்க நினைத்தேன். அதன்படி இன்று அறிவித்திருக்கிறேன். என்னோட கண்கள், இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளை தானம் செய்து முறைப்படி தானம் செய்ததற்கான டோனர் அட்டையையும் வாங்கிட்டேன்.

நாம ஆரோக்கியமாக இருக்கும் போதே..!

கச்சேரியின் போது

நாம ஆரோக்கியமாக இருக்கும் போதே உடல் உறுப்புகளை தானம் செய்திடனும் விரும்புறேன். சில பேர் கடைசி காலத்தில் உடல் தானம் செய்யணும்னு விரும்புவாங்க. ஆனா, அவங்க உடல் தானம் செய்வதற்கான சூழல்கள் அமையால் போயிடும். எல்லோரும் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவரை எப்படியாவது காப்பத்திடணும்னு தான் நினைப்பாங்க. ஆர்கன் டோனர் பண்ணனும் தோணவே தோணாது.

அதைப் போல ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டால் கூட, கூட இருக்கறவங்க பதட்டமாகவும், சிகிச்சைக்கான சூழல்களிலும் தான் இருப்பாங்க. அந்த நேரத்திலும் நமக்கு உடல் தானம் செய்யணும்னு தோணாது. சில பேருக்கு காரியம் எல்லாம் முடிந்த பிறகு அவரின் உறவினர்கள் 'இப்படி இறுதி சடங்கு பண்ணுவதற்கு பதில், அவரது உடலை தானம் செய்திருக்கலாமோ.. யாருக்காவது பயன் படுமேனு'னு நினைக்கறதும் உண்டு. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யறதுல என்ன பயன்!

இமான்

அப்படி சூழல்களுக்கு இடம் கொடுக்க கூடாது நல்லா இருக்கும் போதே, தானம் செய்திருக்கேன் என்பது சந்தோஷம் தான். டோனர் அட்டையில் இருக்கும் தொலைபேசி எண்களை என்னோட மனைவி, உறவினர்கள் அத்தனை பேருக்கு கொடுத்துட்டேன். வீட்டுல எல்லோருக்கும் சந்தோஷம். என்னை பார்த்துட்டு இப்ப என் மனைவியும் உடல் உறுப்பு தானம் செய்திருக்காங்க. எங்களை பார்த்து, இப்ப உறவினர்கள் பலருக்கும் 'நாமும் உடல் தானம் பண்னலாம்'னு தோணியிருக்குது. நாம இறந்து ஆறு மணி நேரத்துக்குள்ளாக மருத்துவ மனைக்கு தகவல் சொன்னால் போதும். ஆனால், இறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக தகவல் சொல்லுவது நல்லது. அப்போது தான் கண்கள், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் செயலிழக்காமல் இருக்கும் போதே, எடுத்துக்க முடியும்.'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் இமான்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

குடும்பஸ்தன் விமர்சனம்: அட்டகாசம் மணிகண்டன்; இந்த குடும்பஸ்தன் அலப்பறைகள் சிக்ஸர் அடிக்கிறதா?

நவீன் (மணிகண்டன்) தனது காதலி வெண்ணிலாவை (சாந்வி மேக்கஹனா) நண்பர்களின் உதவியோடு பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். அதில் நவீனின் பெற்றோருக்கு அதிருப்தி இருந்தாலும் அவர்களின் வீட்டிலேயே தம்பதிகளின் இல்ல... மேலும் பார்க்க

பாட்டல் ராதா விமர்சனம்: குடிநோயை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கும் கதைக்களம்; ரசிக்க வைக்கிறதா?

'பாட்டல் ராதா' என்ற சாமானியர் எப்படி மீண்டும் 'ராதா மணியாக' மாறுகிறார் என்ற பயணத்தைப் பேசுகிறது 'பாட்டல் ராதா'.சென்னையைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான பாட்டல் ராதா என்கிற ராதா மணி (குரு சோமசுந்தர... மேலும் பார்க்க

கஞ்சா கருப்பு: `என் மூஞ்சைப் பாத்தும் ‘ஏமாத்திடுவான்’னு நினைக்கிறார் பாருங்க.!' - வாடகை வீடு சர்ச்சை

ஹவுஸ் ஓனர் பஞ்சாயத்து!சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு. பாடகர் மனோ வீட்டுக்குப் பின்புறம் அமைந்துள்ள பாரதி பார்க் அருகே இருக்கிறது இவர் வாடகைக்குக் குடியிருக்கும் வீ... மேலும் பார்க்க