ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிகர லாபம் 70% சரிவு!
புதுதில்லி: ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 70 சதவிகிதம் சரிந்து ரூ.719 கோடி ஆக உள்ளது.
இதுகுறித்து நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,450 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த வருவாய் ரூ.42,134 கோடியிலிருந்து சரிந்து ரூ.41,525 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.38,815 கோடியாக இருந்த செலவினம் தற்போது, ரூ.40,250 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மூலதன செலவு ரூ.3,087 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த செலவு ரூ.10,937 கோடியாக இருந்தது.
இந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.719 கோடியாக இருந்தது. அதே வேளையில், இந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து வந்த வருவாய் ரூ.41,378 கோடியாகவும், அதன் செயல்பாட்டு வட்டி, வரி மற்றும் கடனளிப்புக்கு முந்தைய வருவாய் ரூ.5,579 கோடியாகவும் இருந்தது.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி நிகர கடன் ரூ.80,921 கோடியாக இருந்தது. இது செப்டம்பர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ரூ.1,884 கோடி குறைந்ததுள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் அதன் ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தியானது 7.03 மில்லியன் டன்னாக இருந்தது. இது வருடா வருடம் 2 சதவிகிதமும் காலாண்டுக்குக் காலாண்டு 4 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இந்த காலாண்டில் இந்திய செயல்பாடுகளில் திறன் பயன்பாடு 91 சதவிகிதமாகவும், ஸ்டீல் விற்பனை 6.71 மில்லியன் டன்னாக இருந்தது. இது வருடா வருடம் 12 சதவிகிதமும் அதே வேளையில் காலாண்டுக்குக் காலாண்டு 10 சதவிகிதமும்அதிகரித்துள்ளது.