விகடன் Play:`நம்மை நெகிழ வைத்த இயக்குநர் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' இப்போது Vikatan Play-யில்
விகடனில் வெளியான சூப்பர் டூப்பர் தொடர்களில் ஒன்று இயக்குநர் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்'.
துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம்.
மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன்.
விகடனின் முக்கியமான தொடர்களில் 'நீரதிகாரம்', 'வேட்டை நாய்கள்', 'வந்தார்கள் வென்றார்கள்' உள்ளிட்டவை விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாகவும் கேட்கலாம். அந்த வரிசையில் இப்போது ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' தொடரையும் ஆடியோ வடிவில் விகடன் Play-ல் கேட்கலாம்.
நம்மை கலங்க வைத்த, நெகிழ வைத்த, நம் மேன்மைகளையும், கீழ்மைகளையும் சுட்டிக் காட்டிய, நம்மை அசைத்துப்பார்த்த விகடனின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரிஸான ராஜூமுருகனின் வட்டியும் முதலும் Audio Bookஐ இன்று பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் இயக்குநர் ராஜூமுருகன் வெளியிட்டனர். பாடலாசிரியர் யுகபாரதியின் 'மஹா பிடாரி' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வு நடந்தது.
Link : https://bit.ly/Vattiyum-Muthalum-VP
Vikatan Appஐ Download செய்யுங்கள், Play Iconஐ க்ளிக் பண்ணி வட்டியும் முதலும் புத்தகத்தை Listen பண்ணுங்க. | #Vikatan | #VikatanPlay | #playonplay