செய்திகள் :

'தாக்குதல், ரத்தக்காயங்கள், மயக்கம்...' - பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகளுக்கு நடந்தது என்ன?!

post image

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதான தாக்குதல் நடந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என பயிற்சியாளர் சுரேஷிடம் பேசினோம். 

"2024 - 25 ம் ஆண்திற்கான பல்கலைக்கழகங்களுக்கு  இடையேயான பெண்கள் கபடி போட்டி பல்வேறு படிநிலைகளாக இந்தியா முழுவதும் நடந்து வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் பலகட்ட போட்டிகளில் ஜெயித்த மாணவிகளுக்கு பஞ்சாப் மாநிலம் குருகாசி பல்கலைக்கழகத்தில் வைத்து காலிறுதிப் போட்டி கடந்த மூன்று நாள்களாக நடந்து வந்தது. பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருந்து மூன்று பல்கலைக்கழகங்கள் தேர்வாகியிருந்தது. 36 மாணவிகள் ஆறு பயிற்சியாளர்கள் என 42 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டோம்.

இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகளுக்கும் தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அதில் தர்பாங்கா பல்கலைக்கழக மாணவிகள் வெற்றி பெற்றுவிட்டனர். போட்டி முடிந்த தருவாயில் வீராங்கனைகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பேசிக்கொண்டு இருக்கும் போதே, தமிழக வீராங்கனைகள் மீது அங்கிருந்த பயிற்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதை நாங்கள் தடுக்க போன போது அங்கிருந்த பஞ்சாப் மக்கள், பீகார் மாநில பயிற்சியாளர்கள், என எல்லாரும் ஒன்று கூடி எங்கள் அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தி, கிடைக்கும் பொருள்களையெல்லாம் தூக்கி எறிந்தனர். இதில் தமிழக மாணவிகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. ஒரு மாணவி மயக்கம் அடைந்தார். இந்நிலையில் மாணவிகளை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.  மாணவி ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் அனைவரும் பத்திரமாக தமிழகம் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே இப்போது எங்கள் மனநிலையாக இருக்கிறது"என பதட்டத்துடன் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Keerthy Suresh: இது கீர்த்தி சுரேஷின் 'Wedding Party' - அட்டகாச கிளிக்ஸ்!

Keerthi Suresh: 'Wedding Party'Keerthi Suresh: 'Wedding Party'Keerthi Suresh: 'Wedding Party'Keerthi Suresh: 'Wedding Party'Keerthi Suresh: 'Wedding Party'Keerthi Suresh: 'Wedding Party'Keerthy Suresh... மேலும் பார்க்க

விகடன் Play:`நம்மை நெகிழ வைத்த இயக்குநர் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' இப்போது Vikatan Play-யில்

விகடனில் வெளியான சூப்பர் டூப்பர் தொடர்களில் ஒன்று இயக்குநர் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்'.துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அ... மேலும் பார்க்க

Explained: `அதென்ன Enemy Property?' - சைஃப் அலிகானின் ரூ.15,000 கோடி சொத்தில் உள்ள சிக்கலென்ன?

Enemy Property - எதிரிச் சொத்துஇந்தியாவின் தற்போதைய பேசுபொருள்களில் ஒன்று 'எதிரிச் சொத்து'. சில தினங்களுக்கு முன்பு திருடனால் கத்தியால் குத்தப்பட்ட பாலிவு நடிகர் சைஃப் அலிகான், இந்த எதிரிச் சொத்து விவ... மேலும் பார்க்க

Sundar.C : அணி வகுத்த பிரபலங்கள்... நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர்.சி | Photo Album

Sundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friendsSundar.C with his friends... மேலும் பார்க்க