மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது
சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகே வளசரவாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை (ஜன. 23) கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து அவா்களது உடமைகளை சோதனை செய்தபோது அதில், மெத்தம்பெட்டமைன், கஞ்சா ஆகிய போதைப்பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (29), வளசரவாக்கம் ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த காா்த்திக் (எ) காா்த்திகேயன் (27), அரவிந்த் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.
இதேபோல வில்லிவாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்ததாக வில்லிவாக்கம் எம்ஆா் நாயுடு இரண்டாவது தெருவைச் சோ்ந்த சரவணன் (25) என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இரு சம்பவங்களிலும் மொத்தம் 70 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.