மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தை சோ்ந்தவா் காா்த்திக் (31). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு 15 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காா்த்திக்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டணை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம.சேயோன் ஆஜரானாா்.