செய்திகள் :

வரம் தரும் வாரம்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 24 - 30) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு. தொழிலில் ஆதரவு அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் போட்டிகளில் இருந்து விடுபடுவீர்கள். விவசாயிகள் மகசூலில் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை முடிப்பதில் சிரமம் ஏற்படும். கலைத் துறையினருக்கு நேரிட்ட தடைகள் விலகும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 24, 25.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் பொறாமை குறையும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். உடனிருப்போர் மதிப்புடன் நடப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் தக்க நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முறையில் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். பெண்கள் உறவினர்களின் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 26, 27, 28.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தடைகள் குறையும். பிறருக்கு உதவும்போது சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவீர்கள். புதிய வாகனங்களுக்கு பராமரிப்பு செலவைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய கடன்களைத் தர வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பயிற்சிகளை அதிகரிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜனவரி 29, 30.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சமூகத்தில் உயர்ந்தோரிடம் நட்பு உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஆர்வம் கூடும். பழைய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரிகள் கூடுதல் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருள்கள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மரியாதை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் குழந்தைகளைக் கவனிப்பீர்கள். மாணவர்கள் கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

சிந்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வருமானம் சீராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு உண்டு. வியாபாரிகளின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் பயிர்களை நன்கு பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பதவிகளைத் தக்கவைப்பீர்கள். கலைத் துறையினர் துறையில் புதுமைகளைப் புகுத்துவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மனோபலம் கூடும். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். விவசாயிகள் வருமானம் குறையாது.

அரசியல்வாதிகள் அதிக முயற்சியுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு வீண்செலவுகள் ஏற்படும். பெண்கள் தாய்வழி உறவினர்களால் மகிழ்வீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உடனிருப்போருடன் ஒற்றுமை ஓங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். போட்டிகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளை அவசரப்பட்டு செய்ய வேண்டாம். விவசாயிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைப்பீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் பெற்றோரின் உடல்நலக் குறைவால் வருத்தம் அடைவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பெற்றோருடனான சுமுக உறவு மேம்படும். குடும்பத்தில் நல்லதொரு மாற்றம் உண்டாகும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள் யோகா கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தைரியத்துடன் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் கூடும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவாய் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வழக்குகளில் தாமதம் ஏற்படும். பிரச்னைகளுக்கு அமைதி காண்பீர்கள். பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். முன்யோசனையுடன் செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படும். வியாபாரிகள் தடைகளையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். நேர்வழியில் சிந்திப்பீர்கள். ரகசியங்களை காப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். வியாபாரிகள் செலவுகளைக் குறைப்பீர்கள். விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும்.

அரசியல்வாதிகள் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். கலைத் துறையினர் திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான அந்நியோன்யம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று கவனக் குறைவு ஏற்படலாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழில் சீராக நடக்கும். கடன் வாங்க மாட்டீர்கள். செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் தக்க நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகளின் செயல்கள் வெற்றி அடையும். விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விடாமுயற்சி தலைப்புக்கென ஒரு சக்தி இருக்கிறது: அஜித் குமார்

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகாவிட்டால் என்ன நம் படம் வெளியாகும் நாள்தான் பண்டிகை என நடிகர் அஜித் குமார் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்... மேலும் பார்க்க

பொய் சொல்லுவதை நிறுத்துங்கள்: மகிழ் திருமேனி

விடாமுயற்சி படத்தின் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மகிழ் திருமேனி வதந்திகள் குறித்து பொய் சொல்லுவதை நிறுத்துங்கள் எனப் பேசியுள்ளார்.விடாமுயற்சி படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்தன. முதலில் பொங்கலுக்கு ... மேலும் பார்க்க

ஆன்லைனில் அதிக நேரம் உள்ள குழந்தைகளுக்கு 'மூளைச் செயல்திறன் குறைவு' - அறிகுறிகள், காரணங்கள்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் மொபைல்போனுக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. சமூக வலை... மேலும் பார்க்க

இது என்னுடையது மட்டுமல்ல, நம்முடைய பயணம்..! 10 ஆண்டுகளை நிறைவுசெய்த தெலுங்கு இயக்குநர்!

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி தனது பத்தாண்டுகள் நிறைவையொட்டி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ர... மேலும் பார்க்க

எம்புரான் டீசர் ரிலீஸ் தேதி!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து முடித்துள்ளார். ... மேலும் பார்க்க

காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோவிச், ஸ்வெரெவ் மோதினார். காயத்தினால் அவதியுற்ற ஜோகோவிச் பாதியிலேயே வெளியேறினார். 50ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய நோவக் ஜோகோவிச் த... மேலும் பார்க்க