செய்திகள் :

இருவருக்கு மறுவாழ்வு! மூளைச்சாவு அடைந்த பூசாரியின் உறுப்புகள் தானம்!

post image

மத்திய பிரதேசத்தில் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட கோயில் பூசாரியின் உடல் உறுப்புகள் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான பலிராம் குஷ்வா (வயது 61) என்ற கோயில் பூசாரி, ஜாபல்பூரில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் ஓட்டக் கூடிய மூன்று சக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் மோதி விபத்து நேரிட்டுள்ளது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பலிராம், ஜாபல்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையாத நிலையில், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை விதிகள் 2014 இன் கீழ் நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு, பலிராம் மூளைச்சாவு அடைந்ததாக புதன்கிழமை இரவு மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிக்க : பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

பலிராம் திருமணம் ஆகாதவர் என்பதால், அவரது சகோதரரின் பேரன் ஹரிநாராயணன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னுரிமை அடிப்படையில் போபாலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு நோயாளிகளை காப்பாற்றுவதற்காக பலிராமின் இதயமும் சிறுநீரகமும் விமானத்தில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதேபோல், இந்தூரில் உள்ள நோயாளியை காப்பாற்ற பலிராமின் கல்லீரல் அனுப்ப மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால், முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் பலிராமின் சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, போபாலுக்கு இதயமும், இந்தூருக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டதாக ஜாபல்பூர் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் சஞ்சய் மிஸ்ரா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விமானத்தில் அனுப்பப்பட்ட உறுப்புகள்

இந்தூர் மற்றும் போபாலில் இருந்து மருத்துவக் குழுவினர் ஜாபல்பூருக்கு வியாழக்கிழமை காலை விரைந்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல் அதிகாரிகளுடன் இணைந்து பச்சை வழித்தடம் ஏற்படுத்தி, ஜாபல்பூர் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்புகளை விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

முதலில் மருத்துவமனையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஹெலிகாப்டர் வரை சாலை மார்க்கமாக கல்லீரல் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் இந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்து, மருத்துவமனையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள விமான நிலையத்துக்கு சாலை மார்க்கமாக பச்சை வழித்தடம் அமைக்கப்பட்டு இதயம் கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் போபாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது மத்திய இந்தியாவில் நடைபெற்ற முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

யமுனை நீர் விவகாரம்: யோகி ஆதித்யநாத்துக்கு அகிலேஷ் யாதவின் பதிலடி!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கிய பேசிய நிலையில், அதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். தலைநகரில் சட்டப்பே... மேலும் பார்க்க

ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ராஜஸ்தானில் முன்னாள் எம்எல்ஏவான பல்ஜீத் சிங்குக்கு எதிரான பணமோசடி விசாரணையில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் தௌசா மற்றும் ஹரியாணாவி... மேலும் பார்க்க

பாஜக எம்எல்சி சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜன.30 வரை நடவடிக்கைக்கு தடை

பெங்களூரு : ‘பாஜகவைச் சோ்ந்த சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் ஜனவரி 30-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால ... மேலும் பார்க்க

மம்தா பானா்ஜியுடன் ஒரே மேடையில் பாஜக தலைவா்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

அலிபூா்துவாா் : மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜான் பா்லா, முதல்வா் மம்தா பானா்ஜியுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது அந்த மாநில அரசியலில் பரபர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ரயில் மோதிய சம்பவம்: உயிரிழந்த பயணிகளில் 7 போ் நேபாளிகள்

ஜல்கான்/மும்பை : மகாராஷ்டிரத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது ரயில் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரி... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்ததது ‘என்டிடிவி’ கடன்முறைகேடு வழக்கு: சிபிஐ அறிக்கையை தில்லி நீதிமன்றம் ஏற்பு

‘என்டிடிவி’ நிறுவனத்துக்கு எதிராக கடன்முறைகேடு குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது. 2008-ஆம் ஆண்டில் என்டிடிவி நிறுவ... மேலும் பார்க்க