செய்திகள் :

கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின்?

post image

சென்னை: கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார்.

ஒரே நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை அறிவாலயத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காலை முதலே ஆயிரக்கணக்கானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு திமுக துண்டைப் போர்த்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பிறகு மாற்றுக் கட்சியினரை வரவேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவில் சேர்ந்தவர்களுக்கு திமுகவில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது.

திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்ட விரும்பவில்லை. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி இந்த மேடையின் கௌரவத்தை நான் குறைக்கவிரும்பவில்லை. நாட்டுக்காக உழைப்பது போல நாடகம் ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அவதூறாக பேசுபவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் முதல்வர் கூறினார்.

மேலும், பேசுகையில், நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட, தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராவோம் என பேசுகிறார்கள். ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியதுதான் திமுக, தமிழகத்துக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை என்றும் பேசியுள்ளார்.

மக்களுக்கு இந்த ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்தினாலே போதும். ஆட்சியின் சாதனைகளால் 200 அல்ல 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் குற்ற... மேலும் பார்க்க

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு: தமிழக அரசு

சென்னை: வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்து... மேலும் பார்க்க

ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.செ... மேலும் பார்க்க

திமுக நேற்று முளைத்த காளான் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.நாம் தமிழர் கட்சியில... மேலும் பார்க்க

தவெக மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்திக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்... மேலும் பார்க்க