சர்ச்சையில் Seeman - Support-க்கு வந்த H Raja | வேங்கைவயல் வழக்கு அப்டேட் | NTK ...
97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா சோபியா காஸ்கான்?
`எமிலியா பெரெஸ் (Emilia Pérez) ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார் கார்லா சோபியா காஸ்கான் (Karla Sofía Gascón)
ஆஸ்கர் விருதுக்கு முதல் முறையாக நாமினேட் செய்யப்படும் திருநங்கை நடிகை என்று பெருமையையும் பெற்றிருக்கிறார் கார்லா சோபியா காஸ்கான். இந்த ஆஸ்கர் விருதில் 13 பிரிவில் இத்திரைப்படம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.
1972-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பிறந்த கார்லா சோபியா காஸ்கான், தனது சிறுவயதிலேயே நடிகராக வேண்டும் என கனவோடு இருந்திருக்கிறார். அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் ஃபிலிம் ஸ்கூலிலில் சேர்ந்து நடிப்பு பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து லண்டனில் குழந்தைகளுக்கான மொழி கற்றல் நிகழ்ச்சியில் பணியாற்றினார். தொடக்கத்தில், ஸ்பானிஷ் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பிறகு தனது கரியரை அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த 2009-ம் ஆண்டு மெக்சிகோவிற்கு குடிபெயர்ந்தார்.
2018 ஆம் ஆண்டில் தனது பாலினத்தை மாற்றம் செய்து கொண்டார். பாலினத்தை மாற்றம் செய்து கொண்ட பிறகு, கர்சியா என்ற தனது பெயரை கார்லா சோபியா காஸ்கான் என மாற்றம் செய்து கொண்டார். இவருக்கும் மரிசா குட்டிரெஸை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 2011-ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.
முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கும் திருநங்கை நடிகை கார்லா சோபியா காஸ்கான்தான். இதற்கு முன் நடிப்பை தாண்டி பிற பிரிவுகளில் திருநங்கைகளான இசையமைப்பாளர் ஏஞ்செலா மோர்லி, அனோக்னி போன்றவர்கள் நாமினேட் செய்யப்பட்ட்டிருக்கிறார்கள்.
இந்த 97-வது ஆஸ்கர் விருதுக்கு விக்கெட் படத்திற்காக சிந்தியா எரிவோ, அனோராவுக்காக மைக்கி மேடிசன், தி சப்ஸ்டன்ஸ் படத்திற்காக டெமி மூர் மற்றும் ஐயாம் ஸ்டில் பியர் படத்திற்காக பெர்னாண்டா டோர்ஸ் ஆகியோர் சிறந்த நடிகைகளுக்கான பிரிவில் கார்லாவுடன் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் சக பெண் நடிகைகள் ஆவர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...