செய்திகள் :

DC Studios: `எல்லா கோட்டையும் அழிங்க' - ரீபூட் செய்யப்பட்ட டி.சி! - டி.சி சரிந்த கதை தெரியுமா?

post image
டிசி (DC) நிறுவனத்தின் ரீபூட் செய்யப்பட்ட சூப்பர்மேன் திரைப்படத்தின் டிரைலரை கடந்த வாரம் வெளியிட்டிருந்ததுப் படக்குழு.

டேவிட் காரென்ஸ்வெட் (DAVID CORENSWET) சூப்பர்மேனாக நடித்துள்ள இத்திரைப்படம் டிசி யூனிவர்ஸை கட்டமைக்கும் திரைப்படங்களில் முக்கியமான படைப்பாகும். கடந்த 1978-ம் ஆண்டு, முதல் சூப்பர்மேன் திரைப்படமான 'சூப்பர்மேன்: தி மூவி' திரைப்படம் வெளியானது. 2013-ம் ஆண்டு வெளியான 'மேன் ஆஃப் ஸ்டீல்' திரைப்படத்துடன் சேர்த்து இதுவரை 9 சூப்பர்மேன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. டெலிவிஷன் தொடர்களுடன் சேர்த்து இதுவரை 14 பேர் சூப்பர்மேனிற்கு குரல் மற்றும் உருவம் தந்திருக்கிறார்கள்.

நம்மூரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம்தான் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.‌ அதற்கு முன் `ஆரண்ய காண்டம்', `வா குவாட்டர் கட்டிங்' போன்ற திரைப்படங்கள் பின்பற்றியிருந்தாலும் பெரிதளவில் யுனிவர்ஸ் என்பதை மக்களுக்கு பரிச்சயமாக்கியது `விக்ரம்' திரைப்படம்தான். ஆனால் ஹாலிவுட்டில் இது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக சூப்பர் ஹீரோ கதைகளில் யூனிவர்ஸ்தான் அடித்தளம் . இருப்பினும், டிசி நிறுவனத்தைப் பொறுத்தவரை இது சிக்கலான விஷயம்தான். இதற்கு முன்பு இருந்த டிசி யூனிவர்ஸில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'சூசைட் ஸ்குவாட்', 'அக்வாமேன்' , 'ஷசாம்' என ஏராளமான திரைப்படங்கள் வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றிருக்கிறது.

LCU - Lokesh Kanagaraj

ஆனால் ஃப்ளாஷ் (FLASH), அக்வாமேன் 2 (AQUAMAN 2), ஷசாம் 2 (SHAZAM 2), வொன்டர் வுமன் 2 (WONDER WOMAN 2), ப்ளாக் ஆடம் (BLACK ADAM) திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. படம் முடிந்ததும் வரும் போஸ்ட் க்ரெடிட் காட்சிகள் முறையே ஒருங்கிணைக்கப்படாமல் தனித்தனியாக நின்றது. பழைய யூனிவர்ஸின் பெரும் படைப்பாக உருவான ஜஸ்டிஸ் லீக் (JUSTICE LEAGUE) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் ஜாக் ஸ்நைடரின் (ZACK SNYDER) மகள் இறந்ததால் படம் முழுமை அடையும் முன்னரே அவர் விலகினார். மீதி திரைப்படத்தை இயக்குநர் ஜோஸ் வீடானை (JOSS WHEDON) வைத்து நிறைவு செய்தது டிசி.

படத்தின் கதையையும் காட்சிகளையும் நிறையவே மாற்றி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியீட்டிற்கு பின்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது, வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தன் உண்மையான ஸ்க்ரிப்டோடு கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு தன் படைப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார் ஜாக் ஸ்நைடர் . அப்படி ஏற்கனவே வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தின் புது வெர்ஷனாக `HBO MAX' தளத்தில் 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஜஸ்டிஸ் லீக்: ஸ்நைடர்ஸ் கட்' (JUSTICE LEAGUE: SNYDER'S CUT). இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று, அந்த ஆண்டு ஓ.டி.டி- யில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

Zack Synder's Justice League

மேலும் தன்னிடம் அடுத்து படங்களை கட்டமைக்க அடுத்தடுத்து 5 ஸ்க்ரிப்ட்கள் உள்ளதாக அதிரடியாக அறிவித்தார் ஸ்நைடர். இதனை கேட்டதும் உற்சாகத்தின் உச்சிக்கே ரசிகர்கள் சென்றனர். 'ஸ்நைடர் வெர்ஸ்'(SNYDER VERSE) என பெயரிட்டு சமூகவலைத்தளங்களில் ஹேஷ் டேக்குகளை பறக்கவும் விட்டனர் . ஆனால் கொஞ்சமும் செவி சாய்க்காமால் அந்த பிராஜெக்டுகளுக்கு அனுமதி மறுத்தது டிசி.

நம்மூரில் காலங்காலமாக நிகழும் ரசிகர் மோதல் போன்றுதான் காமிக் உலகில் மார்வெல்-டிசி இடையே போட்டி இருக்கும் . மார்வெல் ஸ்டுடியோஸ் 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' (AVENGERS : ENDGAME) என்ற இமாலாய படைப்புடன் அதனை சாத்தியமாக்க 21 திரைப்படங்களுடன் வலுவான ஒரு யூனிவெர்ஸ் கட்டமைத்து நின்றது. பிற காமிக் நிறுவனங்களும் தங்கள் படைப்புகளை திரைப்படம் மற்றும் வெப் தொடர்களாக உருவாக்கி வெற்றி கண்டு வந்தது. ஆனால் `டிசி' யின் கடந்த தசாப்த உழைப்பு பயனற்றதாக அமைந்தது . இவை அனைத்தும் டிசி நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியது.

James Gunn

இந்நிலையில் தான் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கன் (JAMES GUN) நிறுவனத்திற்கு தலைமை ஏற்றார். 'டிசி ஃபிலிம்ஸ்'(DC FILMS) என்ற பெயரை டிசி ஸ்டுடியோஸ் (DC STUDIOS) என்று பெயர் மாற்றம் செய்தனர். புதிய லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டது. படங்களின் முறையே கட்டமைக்கப்படாதது , அவற்றுக்கிடையே ஆன இணைப்புகள் , பெரிய படங்களின் தோல்வி , ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதது , போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி என அனைத்தும் ஒரு சேர அமைய ஏற்கனவே இருந்த 'DC EXTENDED UNIVERSE -DCEU' ஐ நிறுத்தி 'DC UNIVERSE -DCU' ஆக ரீபூட் செய்யப்போவதாக அறிவித்தார். தற்போது உருவாகி வரும் இந்த சூப்பர்மேன் திரைப்படத்தை ஜேம்ஸ் கன்னே இயக்கியும் உள்ளார்.

இந்த திரைப்படத்தில் சூப்பர்மேனின் ஆஸ்தான வில்லன் கதாபாத்திரமான லெக்ஸ் லூதர் (LEX LUTHOR) கதாபாத்திரத்தில் நிக்கோலஸ் ஹோல்ட் (NICHOLAS HOULT) நடித்துள்ளார். டிரைலரில் வந்த காட்சிகள் இதுவரை வெளிவந்துள்ள `டிசி' திரைப்படங்களின் டார்க்கான சாயலில் அல்லாது கலர்ஃபுல்லாக இருக்கிறது .சூப்பர்மேனை முழு பலம் படைத்தவராய் காட்டாமல் அடிவாங்குவதைப் போல் சாதாரணமாக முதல் முறை காட்டி இருக்கின்றனர். பிற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களான க்ரீன் லான்டர்ன் (GREEN LANTERN), ஹாக் (HAWK), மிஸ்டர் டெரிஃபிக் (MR TERRFIC) போன்ற கதாப்பாத்திரங்களையும் காட்டியுள்ளனர்.

இவை அனைத்தும் இந்த திரைப்படத்தை `டிசி' புதிய முறையில் அணுகியுள்ளதைக் காட்டுகிறது. அது எந்த வகையான விளைவை தரப்போகிறது என்று படம் வெளிவந்தப் பிறகு தான் தெரியும் . மேலும் இந்த திரைப்படம் விடுமுறை தினங்களையொட்டி வெளியாக இருப்பதால் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி'யாக அமைய வாய்ப்புகளும் உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைலர் சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்பு இருந்த சூப்பர்மேனான ஹென்றி காவில்ஸிற்கு (HENRY CAVILS) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக இருந்ததாக பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர் . தற்போது அவரை மாற்றியதும் பழைய யூனிவர்ஸை அப்படியே நிறுத்தியதாலும்,சமூக வலைதளப் பக்கங்களில் `டிசி' ரசிகர்களே இரு தரப்பாக பிரிந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

பல வீழ்ச்சிகளுக்குப் பிறகு எழுந்து நின்று 'எல்லாக் கோட்டையும் அழிங்க,நான் முதல்ல இருந்து வரேன் ' என ஃபிரெஷாக தொடங்குகிறது டிசி . அதனால் படங்களை நன்கு திட்டமிட்டு செயல்படுத்த முனைகிறது டிசி.

புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் டிசி யூனிவர்ஸின் முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது. அதனால் இந்த திரைப்படத்தின் வெற்றி டிசி நிறுவனத்திற்கு மிக முக்கியமானது .இதனைத் தொடர்ந்து ஸ்வாம்ப் திங் (SWAMP THING), க்ளே ஃபேஸ் (CLAY FACE), பேட்மேன்(BATMAN) திரைப்படங்கள் ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. தற்போது வரை வெகு சில படங்களை மட்டுமே திட்டமிட்டுள்ள டிசி , வரும் காலங்களில் திட்டத்தை விரிவாக்க உள்ளது.

இவை அனைத்தும் ஒரு பெரிய பிராஜெக்டில் இணைக்க அதிக வாய்ப்புள்ளது. இது அல்லாது தனியாக வெளிவந்த ராபர்ட் பாட்டின்சனின் (ROBBERT PATTINSON) பேட்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் உள்ளது. க்ரியேச்சர் கமான்டோஸ் (CREATURE COMMANDOS) என்ற அனிமேட்டட் தொடர் HBO MAX மற்றும் JIO CINEMA ஓ.டி.டி தளத்தில் ஒவ்வொரு எபிசோடாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

போஸ்டரில் காட்டப்பட்டுள்ள' LOOK UP' என்ற வாசகத்திலும், சூப்பர்மேனுக்கே உரித்தான உடையிலும், பழைய சூப்பர்மேனை நினைவூட்டி இருப்பது ரசிகர்களிடைபே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

Vikatan Play - Neerathikaaram

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்!

'ஆபட்து அப்பட்து' என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? இல்லை இந்த வார்த்தையே புதிதாக இருக்கிறதா? புதிதாக இருக்கிறதென்றால் என்றால் உங்களை சுற்றி ஒரு 2கே கிட் இல்லை என்று அர்த்தம். யூடியூபில் வெளியான இரண்டு ... மேலும் பார்க்க

Christopher Nolan: `The Odyssey'; நோலனின் அடுத்த திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு `ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வெளியாகியிருந்தது. `அணுகுண்டின் தந்தை' என்றழைக்கப்படு... மேலும் பார்க்க

Cristopher Nolan: ஆஸ்கர் நாயகனுக்கு `சர்' பட்டம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து மன்னர் குடும்பம்!

உலகத் திரையுலகில் புகழ்ப்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். பேட் மேன் டிரையாலஜி படங்கள் மூலம் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட கிறிஸ்டோபர் நோலன், அறிவியல் புனைவுக் கதைகள... மேலும் பார்க்க

Mufasa - The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்... குரல் கொடுத்தவர்கள் கூறுவதென்ன?

2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், கதாநாயகனான முஃபாசாவுக்... மேலும் பார்க்க

Christopher Nolan: ` ஐமேக்ஸில் புதிய பரிசோதனை!' - அடுத்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்த நோலன்!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ஐமேக்ஸ் டெக்னாலஜி மீது அப்படியொரு ப்ரியம்.அவர் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்ஷன் திரைப்படங்களுக்குத்தான் பயன்ப... மேலும் பார்க்க

28 Years Later: ஐபோனில் படம் பிடிக்கப்பட்ட பிரபல படத்தின் சீக்குவல்! - ஜாம்பியாக கிலியன் மர்ஃபி?

கடந்த இரு தினங்களாக இணையத்தை ஒரு ஹாரர் படத்தின் காணொளி ஆக்கிரமித்திருக்கிறது.நேற்று முன்தினம் வெளியான `28 years later' என்ற திரைப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த டிரைலரின் இ... மேலும் பார்க்க