Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
Christopher Nolan: ` ஐமேக்ஸில் புதிய பரிசோதனை!' - அடுத்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்த நோலன்!
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ஐமேக்ஸ் டெக்னாலஜி மீது அப்படியொரு ப்ரியம்.
அவர் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்ஷன் திரைப்படங்களுக்குத்தான் பயன்படுத்துவார்கள். உரையாடல்கள் அதிகமாக இருக்கும் திரைப்படங்களுக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
ஆனால், கிறிஸ்டோபர் நோலன் தன்னுடைய `ஓப்பன்ஹைமர்' திரைப்படத்திற்கு இந்த ஐமேக்ஸ் கேமாராவை பயன்படுத்தினார். அதுவும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராமாவைப் பயன்படுத்தினார். அத்திரைப்படத்தில் பெரும்பான்மையாக காட்சிகள் உரையாடலிலேயே நகரும் . ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை இந்த டெக்னாலஜியின் வழியே அவர் சொல்ல விரும்பினார். அதிக உரையாடல் இருக்கக்கூடிய படத்தை ஐமேக்ஸ் கேமரா மூலம் படம்பிடிப்பதற்கு பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி கடினங்களை மேற்கொண்டு சாத்தியப்படுத்திக் காட்டினார் நோலன்.
அவர் திரைப்படத்தின் ரிஷல்யூஷன் தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஃபிலிம் கேமராவையே தொடர்ந்து பயன்படுத்துகிறார் எனப் பலரும் கூறுவார்கள். ஐமேக்ஸ் கேமரா கொஞ்சம் விலையுயர்ந்தது. அதுமட்டுமல்ல ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்துவது கொஞ்சம் கடினமான ஒன்றுதான். இந்த விஷயங்களை சிந்தித்து பல ஹாலிவுட் இயக்குநர்களும் இந்த ஐமேக்ஸ் கேமராவின் பக்கம் நகரமாட்டார்கள். நோலன் பயன்படுத்தியதுபோல ஐமேக்ஸ் டெக்னாலஜியை வேறு எந்த ஹாலிவுட் இயக்குநர்களும் பயன்படுத்தியதில்லை என்பதை சுட்டிக்காட்ட பல சான்றுகளும், தரவுகளும் இருக்கின்றன.
2008-ல் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான `தி டார்க் நைட்' திரைப்படத்தை ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி எடுத்தார். ஐமேக்ஸ் ஃபிலிம் கேமாரவை ஒளிப்பதிவிற்கான மெயின் கேமராவாக பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதன் பிறகு `இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஐமேக்ஸ் லென்ஸ்களைப் பயன்படுத்தினார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர்கள் டாம் ஹோலான்ட் மற்றும் மேட் டெமான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. ஆனால் அத்திரைப்படத்தின் கதைகளம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
தற்போது அத்திரைப்படம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார் நோலன். ஐமேக்ஸ் டெக்னாலஜியை வைத்து திரைப்படத்திற்காக புதிய பரிசோதனை மேற்கொண்டு வருகிறாராம். அதை வைத்தே தன்னுடைய அடுத்த திரைப்படத்தை எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...