ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம்!
அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த திடீா் கன மழையால் உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கன மழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலையும் சூழ்ந்தது. இதனால், கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டதுடன், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.