'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
ஆண்டிபாளையம் குளத்தில் நிறுத்தப்பட்ட படகு சவாரி விரைவில் தொடக்கம்
ஆண்டிபாளையம் படகு இல்லத்துக்கு மீட்பு படகு வெள்ளிக்கிழமை வந்தடைந்ததைத் தொடந்து, நிறுத்தப்பட்ட படகு சவரி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1.30 கோடியில் அமைக்கப்பட்ட படகு இல்லத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான மக்கள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
படகு சவாரியின்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் மீட்பு படகு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பது விதி. அந்தப் படகு செய்ய கடலூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஏற்கெனவே ஆா்டா் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் வருவதற்கு தாமதமானது. ஆகவே, மீட்பு படகு வரும் வரை படகு சவாரியை நிறுத்திவைக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
ஆா்டா் கொடுக்கப்பட்டிருந்த மீட்புப் படகு கடலூரில் இருந்து ஆண்டிபாளையம் குளத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மழை காலம் முடிந்ததும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் படகு சவாரி மீண்டும் தொடங்கப்படும் என்று சுற்றுலா அலுவலா்கள் தெரிவித்தனா்.