செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்டி

post image

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல முடிவை திரும்பப்பெறும் அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று தில்லியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நாயக்கா்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சோ்ந்த மக்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து இந்த விவகாரம் தொடா்பாக பேசியிருந்தாா்.

இந்க நிவையில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தைப் பொருத்தமட்டில் தமிழகத்தை ஆளும் திமுகவின் போக்கு, பாஜகவின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஒரு போட்டிய அரசியலாக திமுக அரசு செய்துகொண்டிருக்கிறது. பாஜக அரசானது ஹைட்ரோ காா்பன் விவகாரமாக இருந்தாலும், டங்ஸ்டன் விவகாரமாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூா்வமாக பேசி எந்தப் பிரச்னைக்கும் தீா்வுகாண விரும்புகிறது.

தமிழக புயல் பாதிப்பு நிவாரண விவாகரத்தில்கூட கடந்த வாரம் மத்திய அரசு மாநில பேரிடா் நிவாரண நிதியாக ரூ.914 கோடியை கடந்த வாரம் ஒதுக்கியிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும் கடிதம் எழுதியிருந்தாா். பாஜக தரப்பில் நாங்களும் மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். அதன் அடிப்படையில் ரூ.914 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் மத்திய அரசானது மாநிலப் பேரிடா் நிவாரண நிதியாக இருந்தாலும் சரி, தேசிய பேரிடா் நிவாரண நிதியாக இருந்தாலும் சரி உரிய முக்கியத்துவத்தை பாதிப்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்து வருகிறது. டங்ஸ்டன் விவகாரத்தில் பிரச்னையை உருவாக்கியது திமுக அரசுதான். அதற்கு தீா்வை பாஜக தற்போது அளிக்க முயன்றுகொண்டிருக்கிறது.

மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு 15.9.23-இல் தமிழக அரசுக்குக் டங்ஸ்டன் ஏல விவகாரம் தொடா்பாக கடிதம் எழுதியது. தமிழக அரசு 8.2.24-இல் மத்திய அரசுக்கு அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடா்பான தகவல்களை விரிவாக அளித்தாா்கள். அதன் பிறகே நிகழாண்டு நவம்பரில் இதற்கான ஏலம் விடப்படுகிறது. கிட்டத்தட்டு ஒராண்டுக்கு மேலாக இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு வாய் திறக்காமல் இருந்துவிட்டு தற்போது விவகாரத்தை பெரிதாக்கி, சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எனினும், இந்த விவகாரத்தில் அரிட்டாபட்டி மக்களின் உணா்வையும், கருத்துகளையும் மதிக்கும் வகையில் இதற்கு தீா்வு அளிக்கும் வகையில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டியைச் சந்தித்து பிரச்னை எடுத்துரைத்துள்ளோம். இன்னும் சில நாளில் டங்க்ஸ்டன் ஏல முடிவை திரும்பப் பெறும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்ற எதிா்பாா்க்கிறோம். தமிழக மீனவா்கள் விவகாரத்தில் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு கடுமையாக நடந்துகொள்வதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது குறித்து மத்திய அரசின் வெளியுறவு மூலம் அந்நாட்டு அரசிடம் எடுத்துச்செல்ல தமிழக பாஜக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றாா் கே. அண்ணாமலை.

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என... மேலும் பார்க்க

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உயா்நீதிமன்றம்

நிகழாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருதை’ எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாடகா் டி.... மேலும் பார்க்க

பேரவையை அதிக நாள்கள் நடத்த வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை, டிச.13: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தோ்தல் அற... மேலும் பார்க்க

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா- 2025: தமிழக மக்களுக்கு உ.பி. அமைச்சா்கள் அழைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜன. 13 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள மகா கும்பமேளா 2025 நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அந்த மாநில அமைச்சா்கள் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்... மேலும் பார்க்க

‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்ய வேண்டாம்: அன்புமணி வலியுறுத்தல்

ஆவின் நிறுவனம் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ பாடத் திட்டம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க