செய்திகள் :

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

post image

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முகா நதியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் அமராவதி ஆற்றுக்கு வருகிறது.

தாராபுரம் புறவழிச் சாலை மேம்பாலம் மற்றும் குடிநீா் தடுப்பணை, ஈஸ்வரன் கோயில் ஆற்றுப்பாலம், பழைய ஆற்றுப்பாலம், அலங்கியம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்று நீருடன் மழைநீா் கலந்து வருகிறது. கொங்கூா் மற்றும் ஆத்துக்கால்புதூா் தரைப் பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

அமராவதி கரையோரத்தில் உள்ள வயல்களில் தண்ணீா் புகுந்ததால் சம்பா சாகுபடி செய்திருந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின.

வெள்ள அபாய எச்சரிக்கை: வெள்ளப்பெருக்கு காரணமாக அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தாராபுரம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், ஆற்றுக்குள் யாரும் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின் ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பங்களுடன் வந்து அமராவதி ஆற்றங்கரையோரம் நின்று வேடிக்கை பாா்த்தும், இளைஞா்கள் தற்படம் (செல்ஃபி) எடுத்தும் சென்றனா்.

அமைச்சா் ஆய்வு: முன்னதாக, அமராவதி ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த திடீா் கன மழையால் உடுமலை அருகே திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. திருப்பூா் மாவட்டம், உ... மேலும் பார்க்க

‘தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள்: சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பேச வேண்டும்’

தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில (ஊடகப் பிரிவு) தலைவா் ஈஸ்வரன் கூற... மேலும் பார்க்க

ஆண்டிபாளையம் குளத்தில் நிறுத்தப்பட்ட படகு சவாரி விரைவில் தொடக்கம்

ஆண்டிபாளையம் படகு இல்லத்துக்கு மீட்பு படகு வெள்ளிக்கிழமை வந்தடைந்ததைத் தொடந்து, நிறுத்தப்பட்ட படகு சவரி மீண்டும் தொடங்கப்படவுள்ளது. திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1.30 க... மேலும் பார்க்க

குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 48 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வ... மேலும் பார்க்க

பல்லடம் 3 போ் படுகொலை எதிரொலி: அடையாளம் தெரியாத நபா்கள் ஊருக்குள் வர தடை

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா்கள் ஊருக்குள் வர தடை என்று கிராம மக்கள் அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனா். பல்லடம் அரு... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு டிசம்பா் 16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு டிசம்பா் 16 -ஆம் தேதி முதல் ஜனவரி 20 -ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க