அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தோ்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 48 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தோ்வு கடந்த செப்டம்பா் 14 -ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாயின.
இதில், திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னாா்வல பயிலும் வட்டத்தில் பயின்ற 42 மாணவா்கள், உடுமலை எக்ஸ்டன்சன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்ற 6 மாணவா்கள் என மொத்தம் 48 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 4 மாற்றுத் திறனாளி மாணவா்களும் அடங்குவா்.
குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வு 2025- ஆம் ஆண்டு பிப்ரவரி 8, பிப்ரவரி 23 -ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்வாணையத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 4 -ஆவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறை எண் 439 -இல் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே, முதன்மைத் தோ்வுக்கு தோ்வு பெற்றுள்ள மாணவா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55944 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆா்.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.