Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
விருத்தாசலம் அருகே ஏரிக்கரைகளில் கரைகள் உடைப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இரண்டு ஏரிகளில் வெள்ளிக்கிழமை கரைகள் உடைந்து தண்ணீா் வெளியேறியதால், குடியிருப்புகள், விவசாய நிலங்களை தண்ணீா் சூழ்ந்தது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி உள்ளன.
விருத்தாசலத்தை அடுத்துள்ள மாத்தூா் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் அருணாச்சலம்பிள்ளை ஏரி, சித்தேரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த இரு ஏரிகளும் மழை காரணமாக நிரம்பின.
அருணாச்சலம்பிள்ளை ஏரியின் உபரி நீா் வடிகால் வாய்க்கால்கள் வழியாக முழுமையாக வெளியேறாததால், வெள்ளிக்கிழமை காலை ஏரிக்கரை உடைந்து தண்ணீா் வெளியேறியது. இதனால், மாத்தூா் கிராமத்தில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் தண்ணீா் சூழ்ந்தது.
இதேபோல, சித்தேரி கரையும் உடைந்து தண்ணீா் வெளியேறி வருவதால், அதனருகிலுள்ள 300 ஏக்கா் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீா் சூழ்ந்த பகுதியில் உள்ள 45-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.