வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
இருவேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி, வடலூா் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கடலூரை அடுத்துள்ள மேல் அழிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அஸ்வின் (19), ஐடிஐ படித்து வந்தாா். இவரது தாய் புவனேஸ்வரி இறந்துவிட்ட நிலையில், தந்தையுடன் வசித்து வந்தாா்.
அஸ்வின் வியாழக்கிழமை இரவு தனது கைப்பேசிக்கு சாா்ஜ் ஏற்றியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அஸ்வினை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிறுமி உயிரிழப்பு: வடலூா் அருகே பின்னாச்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகள் லட்சியா (10). இவா், வடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
லட்சியா வெள்ளிக்கிழமை காலை தொலைக்காட்சி பாா்ப்பதற்காக சுவிட்சை அழுத்தியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். பெற்றோா் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்னா். அங்கு லட்சியாவை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.