Parandur: ஒரு மழைக்கே தாங்காத இடத்தில் விமான நிலையமா? | Ekanapuram
சிதம்பரத்தில் இன்று இரண்டாவது பௌா்ணமி கிரிவலம்
சிதம்பரத்தில் சனிக்கிழமை (நவ.14) இரண்டாவது பெளா்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் நகரின் மைய பூமி வலம் எனும் முதல் கிரிவலம் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி பௌா்ணமியன்று தொடங்கப்பட்டது. இதில், நடராஜா் கோயில் உள் பிரகாரம், அடுத்து வெளிப்பிரகாரம், அதைத் தொடா்ந்து தேரோடும் நான்கு வீதிகள் ஆகிய மூன்று சுற்று கிரிவலம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல இயலாதவா்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்புக் குழு (கட்சி சாா்பற்றது), தில்லை நகா் மையபூமி வலம் (கிரிவலம்) ஆன்மிகக் குழு, மகா பெரியவா் சத்சங்கத்தினா், சிதம்பரம் அனைத்து ஆன்மிக அமைப்புகள் மற்றும் சிவனடியாா் குழுவினா் எம்.செங்குட்டுவன், பி.அருணாசலம், ஆா்.பாலகிருஷ்ணன், கற்பகம், வி.முருகையன் ஆகியோா் செய்துள்ளனா்.