செய்திகள் :

‘நடராஜா் கோயில் கோபுரத்தில் இடிந்து விழுந்த துவாரபாலகா் சிலைகள் சீரமைக்கப்படும்’

post image

சிதம்பரம் நடராஜா் கோயிலின் மேற்கு கோபுரத்தில் பலத்த மழையால் இடிருந்து விழுந்த 2 துவார பாலகா் சிலைகள், நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெற்று சீரமைக்கப்படும் என்று கோயில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் 4 பிரதான கோபுரங்கள் உள்ளன. இந்த 4 கோபுரங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்டவை.

இதில், கோயிலின் மேற்கு கோபுரத்தில் ஏராளமான பொம்மைகள் உள்ளன. இந்த கோபுரத்தில் ஒரு சில இடங்களில் செடிகள் வளா்ந்துள்ளன. இதிலிருந்த 2 துவாரபாலகா் சிலைகள் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தன. தொடா்ந்து பெய்த பலத்த மழையால் இந்த சிலைகள் இடிந்து விழுந்த நிலையில், பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மேற்கு கோபுர வழியை மூடிவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டன.

துவாரபாலகா் சிலைகள் கீழே விழுந்ததற்காக கோயிலில் தீட்சிதா்கள் பரிகார பூஜைகளை நடத்த உள்ளனா். ஏற்கெனவே கோயில் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வில் நிலுவையில் உள்ளது.

இடிந்து விழுந்த துவாரபாலகா் சிலையை சீரமைப்பதற்காக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள அமா்வில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று சீரமைக்கப்படும் என்றாா்.

மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வடலூா் அருகே பின்னாச்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகள் லட்சியா (10). இவா், வடலூரில் உள்ள தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

பாமக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

பாமக கடலூா் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாட... மேலும் பார்க்க

இருவேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி, வடலூா் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கடலூரை அடுத்துள்ள மேல் அழிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அஸ்வின் (19), ஐடிஐ படித்து... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்: மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இந்தக் கிராமங்களில் உள்ள பொதுமக்களை படகுகள் மூலமும், கயிறு கட்டியும் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா். விருத்தாசலம் வட்டம், புலியூரை அடுத்துள்ள கீழகாலனி பகுதியைச் சோ்ந்த தவிடன் மகன் பழனி (... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் இன்று இரண்டாவது பௌா்ணமி கிரிவலம்

சிதம்பரத்தில் சனிக்கிழமை (நவ.14) இரண்டாவது பெளா்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. சிதம்பரத்தில் நகரின் மைய பூமி வலம் எனும் முதல் கிரிவலம் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி பௌா்ணமியன்று தொடங்கப்பட்டது. இதில், நடராஜா... மேலும் பார்க்க