வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
பாமக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
பாமக கடலூா் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியச் செயலா் சுதாகா் வரவேற்றாா். நிா்வாகிகள் கோபிநாத், தா்மலிங்கம், ஆறுமுகம், முத்துவைத்திலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள பாமகவின் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநாட்டில் திரளானோா் கலந்துகொள்வது. ஃபென்ஜால் புயல், சாத்தனூா் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொருள்களை இழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். மணல் மேடான விளைநிலங்களை அரசு சீா் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.