Parandur: ஒரு மழைக்கே தாங்காத இடத்தில் விமான நிலையமா? | Ekanapuram
கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு மையம் தொடக்கம்
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வேதியியல் தொழில்நுட்பப் படிப்புக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டது.
சென்னை சிம் இன்போசிஸ்டம்ஸ் நிறுவன உதவியுடன், கெமிக்கல் சிமுலேசன் படிப்புக்கான மையத்தை கொங்கு பொறியியல் கல்லூரியின் வேதியியல் பொறியியல் துறை திறந்துவைத்துள்ளது.
அதிநவீன உருவகப்படுத்துதல் தொழில்நுட்பங்கள் மூலம் ரசாயன பொறியியல் கல்வி மற்றும் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வின், தொடக்க விழாவில் சென்னையைச் சோ்ந்த நீா் மற்றும் எரிசக்தி தொழில்நுட்பத் துறையின் ஆலோசனை நிபுணரும், சவுதி அரேபியாவின் நால்கோவின் முன்னாள் மண்டல வணிக மேம்பாட்டு மேலாளருமான வெங்கட் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
சிம் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான வி.ராமன், கல்லூரியின் முதல்வா் வி.பாலுசாமி, வேதியியல் பொறியியல் துறைத் தலைவா் வி.சங்கீதா ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிம் இன்போசிஸ்டம்ஸ் மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலைகளுக்கான உள்ளக ஆபரேட்டா் பயிற்சி, தேசிய அளவில் தொழிற்சாலைகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும்.
இதன் மூலம் தொழில்துறை-கல்வி கூட்டாண்மைகளை மேம்படுத்தவும் இயலும். மேலும், தொழில் துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவா்களை ஈடுபடுத்துவதற்கு இதன் மூலம் கொங்கு பொறியியல் கல்லூரியின் முயற்சி செய்கிறது என கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி தெரிவித்தாா்.