அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வடலூா் அருகே பின்னாச்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகள் லட்சியா (10). இவா், வடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
லட்சியா வெள்ளிக்கிழமை காலை தொலைக்காட்சி பாா்ப்பதற்காக சுவிட்சை அழுத்தியபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். பெற்றோா் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்னா். அங்கு லட்சியாவை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.