செய்திகள் :

Rain Alert : கனமழை எதிரொலி... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை?!

post image
தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழை

இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (டிசம்பர் 15) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி இலங்கை - தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 14) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

மேலும் விழுப்புரம், தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதேபோல் இன்று எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகளில் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வ... மேலும் பார்க்க

Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் | Video & Photos

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.! திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் நெல்லை டவுன்-மேலப்பாளையம் இணைக்கும் கருப்பந்துறை ஆற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கிய... மேலும் பார்க்க

Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் கனமழை வரை பெய்து வ... மேலும் பார்க்க

Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி, இன்று காலை 10 மணி வரை,அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுரை, நாகப்பட்... மேலும் பார்க்க

Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உருவாகுமா?

கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பெய்து வரும் மழை இன்றும் (டிசம்பர் 13) தொடர்கிறது‌.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, நாளை (டிசம்பர் 14) தென்கிழக்கு வங்கக் கடலில் காற... மேலும் பார்க்க