Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் | Video & Photos
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.!
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் நெல்லை டவுன்-மேலப்பாளையம் இணைக்கும் கருப்பந்துறை ஆற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.!
திருநெல்வேலி தமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.!
கடந்த 24 மணி நேரத் தொடர் கனமழையால் நெல்லை நகரின் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.
செங்கோட்டை - குற்றாலம் சாலையில் காசிமேஜர்புரம் அருகே உள்ள குமரன் கோவில் பாலத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், அருவியில் குளிப்பவர்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கூண்டு வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சி.