செய்திகள் :

Ilayaraja: "அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ - யேசுதாஸிற்காக இளையராஜா செய்த செயல்

post image
ஜே.யேசுதாஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லி இளையராஜா மலையாளத்தில் பேசி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், "அன்புக்குரிய கேரள மக்களே,சொந்தங்களே வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய ஜே.சி.( ஜே.யேசுதாஸ்)அண்ணனுக்கானது மட்டும்தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைத்து, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார். அது என்னவென்றால், கேரளாவிற்கு வந்து நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள், இசையமைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சிம்பொனி செய்ததில்லை.

இளையராஜா - யேசுதாஸ்

நீங்கள் ஒருநாள் கேரளாவில் சிம்பொனி இசையக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ஜே.சி. அண்ணன் சொன்னதை நான் நிறைவேற்றி விட்டேன். சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தை ஜே.சி.அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் சொன்ன வேலை, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ என இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

Miss You Review: சூடு (காமெடி) ஓகே; சுகர் (எமோஷன்) கம்மி; மிஸ் யூ சொல்ல வைக்கிறதா இந்த பெல்லா காஃபி?

திரைத்துறையில் இயக்குநராக முயன்றுவரும் நாயகன் வாசுவை (சித்தார்த்) தேடுகிறார்கள் மந்திரி வில்லனின் அடியாட்கள். வாசுவோ கூர்க் மலையில் காஃபி குடித்துவிட்டு கூலாக இந்த விஷயத்தை டீல் செய்கிறார். அப்போது நட... மேலும் பார்க்க

Vikram 63: விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.கடைசியாக விக்ரம் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 'வீர தீர சூரன்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சித்தா பட இயக... மேலும் பார்க்க