ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திய ஸ்பைஸ் ஜெட்!
Mumbai: தனியாக நடைபயிற்சி சென்ற மனைவி; கோபத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்..!
முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறையை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. ஆனாலும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது மட்டும் இன்னும் முழுமையாக நின்றபாடில்லை. தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கே முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது, மும்பையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் வசிப்பவர் இஸ்மாயில் (31). இவரின் 25 வயது மனைவி அடிக்கடி நடைபயிற்சி செல்வது வழக்கம். வழக்கமாக யாருடனாவது நடைபயிற்சி செல்வது வழக்கம். சில நேரங்களில் நடைபயிற்சிக்கு பக்கத்து வீட்டு பெண்கள் வராத பட்சத்தில் தனியாக செல்ல ஆரம்பித்தார். இது இஸ்மாயிலுக்கு பிடிக்கவில்லை. இது குறித்து தனது மனைவியிடம் சொல்லிப்பார்த்தார்.
ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, இஸ்மாயில் தனது மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று தனது மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதாக கூறினார்.
இஸ்மாயிலின் இந்த நடிவடிக்கையை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய அரசு தடை விதித்த பிறகு நாட்டில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் சம்பவங்கள் 82 சதவீதம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தடையை மீறி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் போன்ற முஸ்லிம் நாடுகளில் பெண்கள் தங்களது குடும்ப ஆண் துணையுடன் தான் வெளியில் செல்லவேண்டும் என்ற விதி இருக்கிறது.