செய்திகள் :

எலான் எனும் எந்திரன் 7: ஸ்டார்ஷிப் டு நியூரா லிங்க்... அறிஞன், கலைஞன், இளைஞன்!

post image
ஒரு சமூகம் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாடு முன்னேறுகிறதா இல்லையா என்பதை, அவர்களின் போக்குவரத்து வசதிகளை வைத்து எடை போடலாம். இருசக்கர வாகனம், கார், பேருந்து, மெட்ரோ ரயில்கள்… என பல்வேறு வசதிகள் அமெரிக்கா போன்ற முன்னனி நாடுகளிலேயே இருக்கும் போதும், ஒரு புதிய போக்குவரத்து வசதியை கொண்டு வர விரும்பினார் எலான் மஸ்க். அதன் பெயர் ஹைப்பர் லூப்.

நிலம், நீர், காற்று, சுரங்கம் என 4 வகை போக்குவரத்தைக் கடந்து, ஐந்தாவது போக்குவரத்து வசதியாக ஹைப்பர் லூப் இருக்குமென்கிறார் எலான். ஒரு நீளமான குழாய். பூமியில் இருக்கும் அழுத்தத்தை விட குறைவாகவே அதற்குள் அழுத்தம் இருக்கும். அதற்குள் இருக்கும் கேப்சியூலில் மனிதர்கள் பயணிக்கும் வகையில் பூமியின் வளிமண்டலத்தைப் போல காற்றின் அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தம் நிறைந்த கேப்சியூல், அழுத்தம் குறைவான குழாய்க்குள் குறைவான எதிர்காற்று அழுத்தத்தில் காந்த சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் என்கிறார் எலான் மஸ்க். இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய பொருட்செலவு செய்ய வேண்டி இருப்பதாலும், நிறைய ஆராய்ச்சிப் பணிகள் மீதமிருப்பதாலும் இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை.

2017ஆம் ஆண்டு, தி போரிங் கம்பெனி என்கிற பெயரில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார் எலான் மஸ்க்.

தொடக்கத்தில் டிபிசி என்கிற நிறுவனத்தின் Godot சுரங்க எந்திரத்தைத் தான் பயன்படுத்தினர், அது ஒத்து வராததால், தங்களுக்கென prufrock என்கிற பெயரில் தனி சுரங்க எந்திரத்தை களமிறக்கினார் எலான் மஸ்க். Prufrock 1 பரிசோதனைகளுக்குப் பின் prufrock 2 மூலம் ஒரு வாரத்துக்குள் 1 மைல் சுரங்கம் தோண்ட முடிந்தது. Prufrock 3 பெரிதாக சோபிக்கவில்லை. Prufrock 4 மூலம் சுரங்கம் தோண்டும் வேகத்தை 3 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது தி போரிங் கம்பெனி.

பல்வேறு சோதனைகளுக்குப் பின், 2019ல் தி போரிங் கம்பெனிக்கு லாஸ் வேகஸ் கன்வென்ஷன் செண்டரில் இருந்து பார்வையாளர்களை உள்ளே, வெளியே அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதி ஒப்பந்தம் கிடைத்தது. அதற்கான இரு சுரங்கங்களைத் தோண்டியது தி போரிங் கம்பெனி. தற்போது அவ்விரு சுரங்கங்கள் மூலம், தன் டெஸ்லா கார்களை வைத்து பார்வையாளர்களை உள்ளேயும் வெளியேயும் அழைத்துச் செல்கிறது.

இச்சுரங்கங்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 4,400 பேர் பயணிக்கலாம் என்கிறது தி போரிங் கம்பெனி. இதனைத் தொடர்ந்து கிளார்க் கவுண்டியில் ஒரு சுரங்கத் திட்டத்தையும் நிறைவேற்றும் ஒப்பந்தத்தையும் வென்றுள்ளது தி போரிங் கம்பெனி.

இத்திட்டத்தை, சுரங்கத் துறை சார்ந்த பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். வழக்கமான சுரங்கங்களில் இருக்கும் எந்த ஒரு வசதியும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தி போரிங் கம்பெனி சுரங்கத்தில் இல்லை, தீ அபாயங்களை எதிர்கொள்வதற்கான வசதிகள் இல்லை, போதுமான சுவாசக் காற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் ஒட்டுமொத்த சுரங்கத்தையும் மூட வேண்டி வரும் என பல விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மனிதன் ஏன் பூமியில் மட்டும் வாழ வேண்டும். மற்ற கிரகங்களிலும் வாழலாமே என்பது தான் எலான் மஸ்கின் கேள்வி. அதற்கு விடையாக செவ்வாய் கிரகத்தை தேர்ந்தெடுத்தார் எலான் மஸ்க். பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப ஒரு ஸ்டார்ஷிப், மனிதர்களுக்குத் தேவையான பொருட்களை செவ்வாய்க்குக் கொண்டு செல்ல தனி எந்திரங்கள், முதலில் ஒரு குழு மட்டும் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று அங்கு மக்கள் வாழும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பர், பிறகு மனிதர்கள் வாழத் தொடங்கிய பின், தங்களுக்குத் தேவையான விஷயங்களை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலான திட்டங்களை முன்மொழிந்தார் எலான் மஸ்க்.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை அடர்த்தியாக்க, நீர் தேவையை பூர்த்தி செய்ய செவ்வாயில் அணு ஆயுத ஏவுகணை கொண்டு தாக்கலாம் என்றார், அக்கோளில் உள்ள பசுமை இல்ல வாயுக்களை வைத்து ஒரு கதகதப்பான சூழலை உருவாக்கலாம் என்றார். சுருக்கமாக அடுத்த சில தசாப்தங்களில் செவ்வாய் கிரகத்தில் ஒரு சுயசார்பு நகரத்தை உருவாக்குவது எலான் மஸ்கின் திட்டங்களில் ஒன்று. ஆனால் செவ்வாய்க்கு மனிதர்களை குடியேற்றும் திட்டதை விமர்சிப்பவர்களும் ஏறாலம்.

ஏஐ நம் வாழ்வில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தனியே சொல்லத் தேவை இல்லை. கடந்த சில ஆண்டுகளில் ஏஐயின் பாய்ச்சல் அதிவேகமாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அதை எலான் மஸ்கும் ஆமோதிக்கிறார். அதோடு ஒரு கட்டத்தில், மனிதர்களுக்கு வேலையே இருக்காது என்றும் கடந்த 2024 மே மாதம் விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டில் பேசினார்.

இதே எலான் மஸ்க் தான், ஆப்டிமஸ் என்கிற பெயரில் மனித உருவிலான ரோபாக்களை களமிறக்கியுள்ளார். சமதளமற்ற நிலபரப்புகளில் கூட நடக்குமளவுக்கு ரோபோக்கள் தயாராகிவிட்டதை இக்காணொளியில் பார்க்கலாம்.

அது போக, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நட்சத்திரமான சாம் ஆல்ட்மென்னோடு எலான் மஸ்க் வெளிப்படையாக மோதிக் கொண்டதையும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் எலான் மச்குக்கு ஏஐ என்றாலே பிடிக்காதா…? அதை வெறுக்கிறாரா..?

அது தான் இல்லை. கூகுளின் டீப் மைண்ட், சாம் ஆல்ட்மென்னில் ஓப்பன் ஏஐ, தன்னுடைய எக்ஸ் ஏஐ என பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது தானே நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம், ஏஐ தொழில்நுட்பத்தை முந்தி, மனிதர்கள் முன்னணியில் இருக்க, நியூராலிங்க் என்கிற செயற்கை நுண்ணறிவையும், மனித மூளையையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மனித மூளையில் ஃபிட்பிட் என்கிற கருவியைப் பொருத்துவதன் மூலம் உடல் செயலிழப்பு, காது கேளாமை, பார்வையின்மை போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாமெனக் கூறினார். இது ஏதோ வித்தை காட்டுவது போலிருக்கிறதென எம் ஐ டி டெக்னாலஜி ரிவ்யூ கடுமையாக விமர்சித்தது. நியூராலிங்கில் பல பரிசோதனைகளின் போது விலங்குகள் இறந்து போனதும், அதனைத் தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மனிதர்களை வைத்து நியூராலிங்க் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அமெரிக்காவின் உணவு & மருந்து கட்டுப்பாட்டமைப்பு அனுமதி வழங்கிவிட்டது.

பொதுவெளியில் அல்லது சமூக வலைதளத்தில், அறிவியல் பற்றி மிக ஆழமாகப் பேசுவது, செவ்வாய் கிரகத்தையே அணு ஏவுகணை கொண்டு நீர் வரவைப்பது, செயற்கையாக ஈர்ப்பு விசையை உருவாக்குவது… போன்ற அதிரடி யோசனைகளைத் தட்டி விடுவது என எலான் மஸ்க் ஒரு மேதாவியாகவே பலரின் கண்களுக்குத் தெரியலாம்.

இந்த அறிவியல் அறிஞன், வணிகக் கலைஞன், மனதளவில் இளைஞன் தொட்டதெல்லாம் பொன்னானதா…? இவர் மீது விமர்சனங்களே இல்லையா..? விடை அடுத்த அத்தியாயத்தில்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Free Train Travel: 1948 முதல் இந்தியாவில் இயங்கும் ஒரே இலவச ரயில்: எங்கே தெரியுமா?

இந்தியாவில் இயங்கும் ஒரே இலவச ரயில் பற்றிய செய்தி தெரியுமா உங்களுக்கு... சுமார் 27 கிராம மக்கள் பயன்பெறும் இந்த ரயிலில் தினசரி 800 பயணிகள் பயணிக்கிறார்கள். இந்த ரயிலின் கதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார... மேலும் பார்க்க

Selena Gomez : இன்ஸ்டாவில் 423 மில்லியன் பாலாவேர்ஸ்... காதலரைக் கரம்பிடிக்கும் பாடகி செலினா!

செலினா கோமஸ் ஒரு பாடகி மற்றும் நடிகை. அமெரிக்க பாப் பாடகர்களில் முக்கியமான நபர் இவர். இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மொத்தம் 423 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள... மேலும் பார்க்க

Google Top 10: இந்தியர்கள் அதிகம் தேடிய உணவு ரெசிப்பி - ஆச்சர்யம் தரும் கூகுள் லிஸ்ட்!

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் தளத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்ட விவரங்களை அந்த ஆண்டின் இறுதியில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளது கூகுள் நிறுவனம். அந்த வகையில் கூகுளில் 2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்த மறுப்பு; சட்டமன்ற சபாநாயகராகத் நர்வேகர் தேர்வு!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத்தின் புதிய கூட்டம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் ... மேலும் பார்க்க

Jisoo: உலகின் மிக அழகான பெண்ணாக கொரியப் பாடகி தேர்வு; 5 மாதம் நடந்த போட்டியின் முடிவு அறிவிப்பு

Nubia இதழால் நடத்தப்பட்ட 'உலகின் மிக அழகான பெண் யார்?' என்ற உலகளாவிய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு தொடங்கிய கருத்துக்கணிப்பு, அக்டோபர் 31, 2024 அன்று... மேலும் பார்க்க