`மகாராஜா'ல அந்த ஒரு சீன்ல உணர்ச்சிவசப்பட்டேன்..!' - விஜய் சேதுபதி | Viduthalai 2
புதுச்சேரியில் 47.3 மி.மீ. மழை பதிவு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையையடுத்து, புதுச்சேரியில் கடந்த 11-ஆம் தேதி முதல் மழை பெய்தது. இது வியாழக்கிழமையும் தொடா்ந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையில் மழை இல்லை. ஆனால், குளிா்ந்த காற்று வீசியது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 47.3 மி.மீ. மழை பதிவானது.
பலத்த மழை எச்சரிக்கையையடுத்து, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனா்.