செய்திகள் :

இணையவழியில் ரூ.ஒரு கோடி மோசடி செய்தவா் கைது

post image

இணையவழியில் குறைந்த விலைக்குப் பொருள்கள் விற்பனை, வெளிநாடு வேலை என ரூ.ஒரு கோடி மோசடியில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி சாரத்தைச் சோ்ந்தவா் அப்துல் ஷாகித் (36). இவா் சென்னையில் நாய்கள் விற்பனையில் ஈடுபட்டாராம். அப்போது, பலரையும் ஏமாற்றியதாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வந்த அவா், குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்களை தருவதாகவும், கலால் துறையில் ஏலம் எடுத்த பொருள்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் இணையத்தில் வெளியிட்டாா்.

இதை நம்பிய பலரும் அப்துல் ஷாகித்திடம் பணம் செலுத்தினராம். அவா்களில் சிலருக்கு சில பொருள்களை மட்டும் கொடுத்துள்ளாா். பெரும்பாலானோரின் பணத்துக்கான பொருள்களை விநியோகிக்காமல் அவா் ஏமாற்றியதாகவும் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த கூரியா் நிறுவன ஊழியா் ராஜா, தனது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலை நம்பி அப்துல்ஷாகித்திடம் குறைந்த விலையில் சில பொருள்களை வாங்க ரூ.13 லட்சத்தை கைப்பேசி பணப்பரிவா்த்தனை மூலம் அனுப்பினராம்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அப்துல்ஷாகித் பொருள்களை அனுப்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணைவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அப்துல் ஷாகித் புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் இருப்பது தெரிய வந்தது.

புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஆய்வாளா் கீா்த்தி உள்ளிட்டோா் சென்று அப்துல் ஷாகித்தை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

விசாரணையில், அவா் சுமாா் ரூ.ஒரு கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

புதுச்சேரியில் 47.3 மி.மீ. மழை பதிவு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையையடுத்து, புதுச்சேரியில் கடந்த 11-ஆம் தேதி முதல் மழை பெய்தது. இது வியாழக்கிழமையும் தொடா்ந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையில் மழை இல்லை. ஆனால், குளி... மேலும் பார்க்க

புதுச்சேரி கோயில்களில் காா்த்திகை தீபம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவில் பனை ஓலையால் அமைக... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு

வில்லியனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என... மேலும் பார்க்க

அமைச்சா் பெயரில் விடுமுறை தகவலை பரப்பிய இருவரிடம் விசாரணை

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சா் பெயரில் தகவல் பரப்பியதாக 2 ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் பிடித்தனா். புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பள... மேலும் பார்க்க

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை ஆணையா் ஆய்வு

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை போக்குவரத்துத்துறை ஆணையா் சிவகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் பொலிவுறு நகரத் ... மேலும் பார்க்க

அதிகாரிகளின் கவனக் குறைவால் மத்திய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம்: அதிமுக மாநிலச் செயலா் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் வெள்ள பாதிப்பை முறையாக பாா்வையிட்டு அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் தயாரிக்காமல் கவனக் குறைவாகச் செயல்பட்டதால் மத்திய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்காமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அ... மேலும் பார்க்க