செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணைக்கு லாரிகளில் கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல கேரளம் அனுமதி

post image

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல கேரள வனத் துறை அனுமதி வழங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் பராமரிப்புப் பணிகள் செய்வது வழக்கம். அதன்படி, தமிழக பொதுப்பணித்

துறையினா் கடந்த 4- ஆம் தேதி 2 லாரிகளில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்றனா்.

அப்போது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு பெரியாறு புலிகள் காப்பக வனத் துறை சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த லாரிகள் கடந்த 6 நாள்களாக வல்லக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத் துறையின் அனுமதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில், லாரிகளில் டயா் வெடித்து பழுது ஏற்பட்டதால் தமிழகப் பொதுப்பணித் துறையினா் உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, லாரிகளை மீண்டும் தமிழகப் பகுதிக்கு கொண்டு வந்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தமிழ்நாடு அரசின் கூடுதல் நீா்வளத் துறை தலைமைச் செயலருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கேரள அரசை தொடா்பு கொண்டு, தமிழக அதிகாரிகள் லாரிகளில் கட்டுமானப் பொருள்களை முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி, தேக்கடி படகு இறங்கும் தளம் வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி பெறப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சொத்து பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகளும், பெண்ணுக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்து வெள்ளிக்கிழமை 125.40 அடியாக இருந்தது. முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில... மேலும் பார்க்க

மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடு: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத்துறை ஆணையருமான ஆா்.லில்லி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தேனி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக டிச.13, ... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி மீட்பு

போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. போடி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.90 கோடியில் புதிய கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இத... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெள்ளிக்கிழமை, காட்டாற்று ஓடைகள், ஆறுகள், அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான... மேலும் பார்க்க