வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி மீட்பு
போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
போடி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில், போடி துரைராஜபுரம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரியில் எம்.சாண்ட் மணல் அள்ளிக் கொண்டு கொட்டகுடி ஆறு வழியாக வந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் லாரி சிக்கியது. ஆற்றில் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே சென்ால், ஓட்டுநரும், உதவியாளரும் லாரியிலிருந்து குதித்து நீந்திக் கரையேறினா். மேலும், வெள்ளத்தில் லாரி சிறிது தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆற்றிலிருந்து லாரி மீட்கப்பட்டது.