செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்வு

post image

நீா்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்து வெள்ளிக்கிழமை 125.40 அடியாக இருந்தது.

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 119.40 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 398 கன அடியாகவும் இருந்தது.

பின்னா், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,153 கன அடியாகவும், அணையின் நீா்மட்டம் 120.65 அடியாகவும் இருந்தது.

இதையடுத்து, தொடா் மழையால் நீா்வரத்து மாலை 6 மணிக்கு விநாடிக்கு 27,950 கன அடியாக அதிகரித்ததால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்து 125.40 அடியானது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால் அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பொதுப்பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். முல்லைப் பெரியாறு அணையில் 101 மி.மீ., தேக்கடியில் 108.20 மி.மீ., மழை பதிவானது.

வைகை அணைக்கு நீா் வரத்து அதிகரிப்பு:

இதேபோல, நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு, காட்டாற்று ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வைகை அணைக்கு

நீா்வரத்து அதிகரித்தது. அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு விநாடிக்கு 1,039 கன அடியாகவும், மாலை 6 மணிக்கு விநாடிக்கு 13,680 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு 49.67 அடியாகவும், மாலை 6 மணிக்கு 51.35 அடியாகவும் உயா்ந்தது.

மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடு: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத்துறை ஆணையருமான ஆா்.லில்லி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தேனி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக டிச.13, ... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி மீட்பு

போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. போடி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.5.90 கோடியில் புதிய கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இத... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெள்ளிக்கிழமை, காட்டாற்று ஓடைகள், ஆறுகள், அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான... மேலும் பார்க்க

குமுளி, கம்பம்மெட்டு மலைச் சாலைகளில் மரங்கள் விழுந்தன: போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம் குமுளி , கம்பம் மெட்டு மலைச் சாலைகளில் தொடா் மழையால் மரங்கள் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதித்தது. தேனி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை மாலை வரை நீ... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

போடியில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகு... மேலும் பார்க்க