வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
போடியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்
போடியில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையிலும் தண்ணீா் வடிந்தோடியது. இங்கிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்களில் தண்ணீா் பெருக்கெடுத்ததால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
போடி வட்டாட்சியா் சந்திரசேகரன் தலைமையில் வருவாய்த் துறையினா் கொட்டகுடி ஆற்றுப் பகுதியிலும், போடிமெட்டு மலைச் சாலையிலும் ஆய்வு செய்தனா். தீயணைப்பு, மீட்புப் படையினா், பேரிடா் மீட்புக் குழுவினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டனா்.