Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சொத்து பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகளும், பெண்ணுக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள வாலிப்பாறையைச் சோ்ந்தவா் சந்திரன். கம்பம் உத்தமபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தை இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, இவரது உறவினா்களான மணி, இவரது மனைவி பேச்சியம்மாள் (65), மகன்கள் செல்வம் (48), தெய்வம் (44), செல்லத்துரை (இறந்து விட்டாா்), உறவினா் விவேகானந்தன் (47) உள்ளிட்டோா் சந்திரனை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பான வழக்கு உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் செல்வம், தெய்வம், விவேகானந்தன் (47) ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகளும், பேச்சியம்மாளுக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி எம்.சிவாஜி செல்லையா தீா்ப்பு அளித்தாா்.