சென்னிமலை முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா
சென்னிமலை முருகன் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிக்கிழமை முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் உற்சவ மூா்த்திகள் 3 முறை கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, 3 தீபங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலின் 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன்புறம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள 25 அடி உயர தீபஸ்தம்பத்தில் கூரபாளையம் காா்த்திகை தீபக் கட்டளைதாரா்கள் சாா்பில் முதல் தீபம் ஏற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள மாா்க்கண்டேசுவரா், உமையவள்ளி சந்நதி முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் 2-ஆவது தீபம் ஏற்றப்பட்டது. இறுதியாக கோயிலின் வெளிபுறத்தில் உள்ள மதில் சுவரில் சிவன்மலை ஆண்டவருக்காக 3-ஆவது தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.