செய்திகள் :

நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்: அமெரிக்க வெள்ளை மாளிகை

post image

‘முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கண்டுபிடிப்புத் தளங்களை உருவாக்குவதில் நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் சந்தித்து ஆலோசித்த நிலையில் வெள்ளை மாளிகை இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் ஆகிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளோம். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கண்டுபிடிப்புத் தளங்களை உருவாக்குவதில் நம்பகத்தன்மையான உறவை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது.

ஏனெனில், விண்வெளி, செமிகண்டக்டா், உயிரிதொழில்நுட்பம், சைபா் பாதுகாப்பு, தொலைத்தொடா்பு மற்றும் தூய எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் இந்தியாவும் நல்லுறவை தொடரும்போது அது வெற்றியடைவதுடன் உலகுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

பலதரப்பு ஒத்துழைப்பு: பயோ-5 உயிரிமருந்துகள் விநியோக சங்கிலி கூட்டமைப்பு, அமெரிக்கா-இந்தியா-தென்கொரியா தொழில்நுட்ப முத்தரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பு என இந்தோ-பசிபிக், ஐரோப்பிய நாடுகளுடன் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அணுசக்தி நிறுவனங்களுக்கு அனுமதி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன்ஆலோசனை மேற்கொண்டாா். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலுடனான சந்திப்பின்போது இணைய மற்றும் கடற்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனா். அதேபோல் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு விதிகளில் (எம்டிசிஆா்) அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்கள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா். இதன்மூலம், விண்வெளி துறையில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மேலும், தடைசெய்யப்பட்ட அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு அதிலிருந்து தளா்வு அளிப்பது தொடா்பான இறுதி முடிவையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்!! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்,... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது. மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந... மேலும் பார்க்க

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏ... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிற... மேலும் பார்க்க