செய்திகள் :

Christopher Nolan: `The Odyssey'; நோலனின் அடுத்த திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

post image
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.

நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு `ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வெளியாகியிருந்தது. `அணுகுண்டின் தந்தை' என்றழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியிருந்தது.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் டாம் ஹோலண்ட் மற்றும் மட் டெமான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்காக ஐமேக்ஸ் தொழிநுட்பத்தை வைத்து ஒரு பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியிருந்தார். இதைத் தாண்டி படம் தொடர்பாக வேறு எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. ஹோமர் எனப்படும் கிரேக்கக் கவிஞரின் ` The Odyssey' என்ற கவிதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகவிருக்கிறதாம். 8-ம் நூற்றாண்டில், ஒரு கிரேக்க கதாநாயகன் ட்ரோஜன் போரிலிருந்து திரும்பும்போது எப்படியான சவால்களைச் சந்திக்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.

Christopher Nolan Movie Update
`ஓப்பன்ஹைமர்' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வரலாற்றுக் கதையை திரைப்படமாக்குகிறார் நோலன்.

இத்திரைப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கும் யுனிவர்ஸல் பிக்சர்ஸ், ``கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பான `The Odyssey' புராணங்கள் கலந்து திரைப்படமாக ஐமேக்ஸ் ஃபிலிம் தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாகவிருக்கிறது. கவிஞர் ஹோமரின் கதை ஐமேக்ஸ் திரைகளில் முதல் முறையாக வரவிருக்கிறது. 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி திரைப்படம் வெளியாகவிருக்கிறது." எனக் கூறியிருக்கிறது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Cristopher Nolan: ஆஸ்கர் நாயகனுக்கு `சர்' பட்டம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து மன்னர் குடும்பம்!

உலகத் திரையுலகில் புகழ்ப்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். பேட் மேன் டிரையாலஜி படங்கள் மூலம் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட கிறிஸ்டோபர் நோலன், அறிவியல் புனைவுக் கதைகள... மேலும் பார்க்க

Mufasa - The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்... குரல் கொடுத்தவர்கள் கூறுவதென்ன?

2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், கதாநாயகனான முஃபாசாவுக்... மேலும் பார்க்க

Christopher Nolan: ` ஐமேக்ஸில் புதிய பரிசோதனை!' - அடுத்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்த நோலன்!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ஐமேக்ஸ் டெக்னாலஜி மீது அப்படியொரு ப்ரியம்.அவர் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்ஷன் திரைப்படங்களுக்குத்தான் பயன்ப... மேலும் பார்க்க

28 Years Later: ஐபோனில் படம் பிடிக்கப்பட்ட பிரபல படத்தின் சீக்குவல்! - ஜாம்பியாக கிலியன் மர்ஃபி?

கடந்த இரு தினங்களாக இணையத்தை ஒரு ஹாரர் படத்தின் காணொளி ஆக்கிரமித்திருக்கிறது.நேற்று முன்தினம் வெளியான `28 years later' என்ற திரைப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த டிரைலரின் இ... மேலும் பார்க்க