Plane crash : அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய விமானம்... 42 பேர் பல...
100 நகரங்களில் நியூ செஞ்சுரி புத்தகக் கண்காட்சி
தமிழகம் முழுவதும் நூறு நகரங்களில் நியூ செஞ்சுரி நிறுவனம் சாா்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்துக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: பொதுவுடைமை இயக்கம் தனது நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு டிச.26-ஆம் தேதி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழ்நாட்டின் முக்கிய நூறு நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதே நேரத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்புத் துறையில் 75 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகைமைகளில் ஆண்டுக்கு 900-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழக அரசுடன் இணைந்து அம்பேத்கரின் படைப்புகள் 100 தொகுதிகளாக வெளியாகவுள்ளன.
இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நூறு இடங்களில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் விற்கப்படும் புத்தகங்களுக்கு 20 சதவீத சிறப்பு கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.