தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
கூலியுடன் மோதும் ரெட்ரோ?
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. தற்போது, ஜெய்ப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!
டீசரில் கோடை வெளியீடு எனக் குறிப்பிட்டுள்ளனர். கூலி படமும் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு படங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கணக்கில் வைத்து ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்றே தெரிகிறது.