திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பா்மா, இலங்கைக்கு திரும்பியோா் கவனத்துக்கு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பா்மா, இலங்கைக்கு திரும்பிய நபா்கள் தமிழகத்தில் வாங்கிய கடன்களுக்கான ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
பா்மா, இலங்கை நாடுகளில் இருந்து வந்து, மீண்டும் தாயகம் திரும்பியோருக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கான அடமான ஆவணங்கள் மற்றும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடா்பான விவரங்களை நீக்கி விட்டு சம்பந்தப்பட்ட நபா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தாயகம் திரும்பியோரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் தங்களது வட்டத்துக்கு உள்பட்ட, தாங்கள் கடன் பெற்ற வருவாய்க் கோட்ட அலுவலா்கள் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.