செய்திகள் :

'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்' - நான்கு முனை போட்டியில் பவன்!

post image

கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக திருமகன் ஈவேரா வெற்றிபெற்றார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 14.12.2024 அன்று இளங்கோவனும் மறைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

Evks இளங்கோவன்

விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சீட் பெறுவதற்குக் கதர்களுக்கிடையில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மறுபுறம் தி.மு.க-வினரும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் யாருக்கு சீட் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீட் பெறுவதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது. திருமகன் ஈ.வே.ரா மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட முதலில் சஞ்சய் சம்பத்திடம்தான் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்துதான் இளங்கோவன் களத்துக்கு வந்தார். மேலும் தி.மு.க-வும் இளங்கோவன் போட்டியிடுவதைத்தான் விரும்பியது. இந்த முறை தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்புகிறார்.

திருமகன் ஈவெரா

அவரது விருப்பத்தை டெல்லி தலைமையிடமும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மறுபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ரூட்டில் மக்கள் ராஜன் சீட் பெறுவதற்கு முயல்கிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தல், பிறகு நடந்த இடைத்தேர்தலின் போதும் சீட் பெறுவதற்குத் தீவிரம் காட்டினார். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டெல்லியிலிருந்த செல்வாக்கால், அவருக்குத்தான் சீட் கிடைத்தது. இதேபோல் இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதரவாளரை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் சிதம்பரம் தனது மகனும் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, 'காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்களை மட்டும் கொண்ட 'வளர் தமிழ் நூலகம்' திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். கூடவே ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களது ஆதரவாளரும் மாநில துணைத் தலைவருமான ஆர்.எம்.பழனிச்சாமிக்கு சீட் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இவர் 2006-ம் ஆண்டு தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் சிதம்பரம் தரப்பு மீண்டும் சீட் கேட்டிருக்கிறது. இவ்வாறு பவனில் நான்கு முனை ஏற்பட்டுள்ளது" என்றனர் விரிவாக.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

இதற்கிடையில், "காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு நாம் ஏன் ஒவ்வொரு முறையும் பணியாற்ற செய்ய வேண்டும்" என தி.மு.க-வில் இருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்புக் குரல்களால் மேலும் சூடாகியிருக்கிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம். "கடந்த முறை நடத்த இடைத்தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் பிரதமராகவிட்டால், நமக்கு உதவியாக இருக்கும் என நினைத்துத்தான் கூட்டணிக்குள் மனக்கசப்பை ஏற்படுத்த வேண்டாம் எனக் காங்கிரஸுக்கு சீட் கொடுத்தோம். கூடவே இளங்கோவனை வெற்றிபெற வைக்க பல வழிகளில் உதவி செய்தோம். எனவே இந்த முறை நாமே நிற்கலாம்" எனத் தலைமைக்கு தி.மு.கவினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதை வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியின் சமீபத்திய பேட்டி உறுதியும் செய்திருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் இருக்கும். அதுபோல ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டால் அதில் போட்டியிட வேண்டுமென தி.மு.க விரும்புவதில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும், கட்சித் தொண்டர்களின் கருத்தை ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின்போது முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர்தான் முடிவை எடுப்பார். அது எந்த முடிவாக இருந்தாலும் அதற்காக நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்திருக்கிறார்.

முத்துசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய உடன்பிறப்புக்கள், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தி.மு.க கொள்கை பரப்பு துணைத் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முயன்று வருகிறார்கள். இருவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கூடவே இருவரும் அமைச்சர் முத்துச்சாமியின் தீவிர ஆதரவாளர்கள். இதில் தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைத்தவர், சந்திரகுமார். இவருக்கு 2016 சட்டசபைத் தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் சீட் வழங்கியது, தி.மு.க. முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிடம் தோல்வியைச் சந்தித்தார். பிறகு நடத்தத் தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

எனவே இந்தமுறை தனக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் சந்திரகுமார். அடுத்ததாக இருக்கும் செந்தில்குமார், பாரம்பரியமான தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் முதல்வர் ஸ்டாலின் வரையில் நேரடி தொடர்பில் இருக்கிறார். இந்த தொடர்பின் மூலமாக தனக்கு சீட் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். சமீபத்தில் முதல்வர் ஈரோடு சென்றபோதே தங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 'தி.மு.க-வுக்கு சீட் கொடுக்கக் கூடாது. காங்கிரசுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்' எனக் கதர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக தி.மு.க தலைமையிடம் செல்வப்பெருந்தகை பேசியிருக்கிறார். காங்கிரஸின் அகில இந்தியத் தலைமையிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் டெல்லி செல்லும் பெருந்தகை, கார்கேவிடம் இதுகுறித்து பேசுவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்" என்றனர்.

ஸ்டாலின் செல்வப்பெருந்தகை

முன்னதாக தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது, நாடு முழுவதும் திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்குத் தொகுதி பார்முலா பரபரப்பாக பேசப்பட்டது. இந்தமுறை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பல்வேறு விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. குறிப்பாக ஈரோடு கிழக்கில் தி.மு.க போட்டியிடுமா?, காங்கிரஸுக்கு வாய்ப்பே வழங்கப்படுமா?, வெற்றிபெற ஆளும் தரப்பு வைத்திருக்கும் திட்டம் என்ன?, வழக்கம்போல இந்த இடைத்தேர்தலையும் அ.தி.மு.க புறக்கணிக்குமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இவை அனைத்திற்கும் விரைவில் விடை தெரிந்துவிடும். மொத்தத்தில் இன்னுமும் சில மாதங்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி லைம்லைட்டில் இருக்கும்!

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் நினைவு கூர்ந்த மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: `மறைந்தார் மன்மோகன் சிங்' - பிரதமர் மோடி இரங்கல் | Live

பிரதமர் மோடி இரங்கல்Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His w... மேலும் பார்க்க

Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத்துவமனை அறிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். டெல்லி எய்ம்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்... மேலும் பார்க்க

'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு துயரமான நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். சில நேரத்தில் நாம் எதற்காக அரசியலில் இ... மேலும் பார்க்க