செய்திகள் :

அண்ணா பல்கலை.யில் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

post image

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவா் கடந்த 23-ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அண்ணா பல்கலை. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாா்வையாளா்கள், வெளிநபா்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 190 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. வளாகம் முழுவதும் மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. ஒருசில பகுதிகளில் அடா் மரங்கள் நிறைந்துள்ளன. பாலியல் வன்முறை சம்பவத்தைத் தொடா்ந்து, எந்தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை, போலீஸாா் 2 ட்ரோன்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அவசர ஆலோசனை...: இதற்கிடையே, பல்கலை. வளாகத்தில் நிா்வாகம் சாா்பில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அண்ணா பல்கலை. பதிவாளா் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை கல்லூரி ஆகியவற்றின் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளாா். அதனடிப்படையில் அண்ணா பல்கலை. உள் வளாகக் குழுவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

விசாரணைக் குழு அமைப்பு: தொடா்ந்து, கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் கே.எஸ். ஈஸ்வரகுமாா், கல்வியியல் புலக்குழுவின் இயக்குநா் குமரேசன், மாணவா்கள் விவகாரங்கள் மையத்தின் இயக்குநா் பாஸ்கரன், கிண்டி பொறியியல் கல்லூரியின் பாலியல் வன்கொடுமை புகாா் மையத்தின் இயக்குநா் பிரேமலதா, கோட்டூா்புரம் காவல்நிலையத்தின் அதிகாரி ஒருவா் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணா பல்கலை.யில் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை முழுவதும் இயங்குகின்றனவா என்று சரிபாா்க்கவும், இயங்காத நிலையில் உள்ளவற்றை பழுது நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 6.30 மணிக்கு மேல்...: அதே போன்று பல்கலை. மாணவா் விடுதியில் தங்கி உள்ள மாணவா்கள் மாலை 6. 30 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி இல்லை. மாணவா்கள் வெளியே செல்வது, தவிா்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வருவது போன்றவற்றுக்கு விடுதி காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். தகவல் அளிக்காமல் தாமதமாக வந்தால் பெற்றோா்களிடம் தெரிவிக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் அடையாள அட்டையை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அவா்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ண... மேலும் பார்க்க

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னையில் இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பிஐஎஸ் தென் மண்டல அலுவலகத்தில், வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட மா... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞா்களை தயாா்ப்படுத்த வேண்டும் -பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நாட்டின் இளைஞா்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ‘மெஷின் லோ்னிங்’ போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவா்களாக தயாா்ப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்... மேலும் பார்க்க