`குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால்..!' - ஓர்...
இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து, ரூ. 85.81 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று 85.27 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு 9வது நாளாகச் சரிந்துள்ள நிலையில், இன்று மட்டும் 3% வரை மதிப்பு குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் ரூபாய் மதிப்பு மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
பங்குச் சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும், ரூபாய் மதிப்பு சரிவுடனேயே தொடங்கியது. இதனால் வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிந்து ரூ. 85.5 காசுகளாக வணிகமானது.
வணிக நேரத்தின் பிற்பாதியில் மேலும் சரிந்து ரூ. 85.81 காசுகளாக நிறைவு பெற்றது. இன்றைய வணிகத்தில் மொத்தமாக 23 காசுகள் சரிந்தது.