சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 புதன்கிழமை அதிகரித்துள்ளது.
கடந்த வார நாள்களில் ரூ. 57,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, வார முடிவில் ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை மாற்றமின்றி விற்கப்பட்ட தங்கம், நேற்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 56,720-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் நாளான இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,100-க்கும், ஒரு சவரன் ரூ. 56,800-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 99-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.